இறுதிக்கட்டத்தில் பொன்னி சீரியல்!
பொன்னி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் தொடர் பொன்னி. இத்தொடரில் நாயகனாக சபரி நாதனும் நாயகியாக வைஷ்ணவி சுந்தரும் நடித்து வருகின்றனர்.
இத்தொடரை இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளைய தலைமுறையினரும் விரும்பிப் பார்த்து வருகின்றனர். இத்தொடர் ஜியோ ஹாட் ஸ்டாரிலும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இத்தொடர் 2023 மார்ச் முதல் 500 எபிசோடுகளைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
இத்தொடருக்கான கதையை பிரியா தம்பி எழுதி வருகிறார். நீரவி பாண்டியன் இயக்கி வருகிறார். பொன்னி என்ற பாத்திரம் எதிர்கொள்ளும் சவால்களை மையப்படுத்தி இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பொன்னி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இத்தொடருக்கான கிளைமேக்ஸ் காட்சிகளின் படப்படிப்பு எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
பொன்னி தொடர் நிறைவடையவுள்ளது இத்தொடர் பார்க்கும் ரசிகர்களுக்கு சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: கருவுற்று இருப்பதை அறிவித்த சின்ன திரை நடிகை!