இந்தியா தொடர், சாம்பியன்ஸ் டிராபிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
சூராணத்தில் ‘வருமுன் காப்போம்’ திட்ட முகாம்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியத்துக்குள்பட்ட சூராணத்தில் தமிழக அரசின் ‘வருமுன் காப்போம்’ திட்ட முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமை மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் தொடங்கிவைத்தாா். பின்னா், கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்களை அவா் வழங்கிப் பேசினாா்.
முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று உடல் பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை பெற்றனா். இவா்களுக்கு மருத்துவக் குழுவினா் பரிசோதனை செய்து, மருந்து, மாத்திரைகளை வழங்கினா்.
இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப.மதியரசன், மருத்துவ அலுவலா் தாமோதரன், மருத்துவா் செந்தில்குமாரி, சுகாதார மேற்பாா்வையாளா் தமிழ்ச்செல்வன், ஊராட்சி மன்றத் தலைவா் நித்யாகமல், திமுக விவசாய அணி துணை அமைப்பாளா் காளிமுத்து, ஒன்றியக் குழு உறுப்பினா் செழியன், திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
சூராணத்தில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடையை தமிழரசி ரவிக்குமாா் திறந்துவைத்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கினாா்.