சூரியின் மண்டாடி: கதாபாத்திரம் அறிமுகம்!
நடிகர் சூரி நடிக்கும் மண்டாடி படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது முழுநேர நடிகராக மாறியிருக்கும் சூரியின் மண்டாடி படத்தின் போஸ்டர் நேற்று (ஏப்.18) வெளியானது.
ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனத்தின் பெயரில் எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்தப் படத்தினை மதிமாறன் புகழேந்தி இயக்கி வருகிறார்.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி ஜி.வி.பிரகாஷ் நடித்த செல்ஃபி படத்தினனை இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
மண்டாடி என்பது கடல் நீர்வாடு பற்றிய அழ்ந்த அறிவு உள்ளவர், நீர் ஓட்டத்தை வைத்து மீன்பிடிக்கும் உத்தி அறிந்தவர் என்றும் கூறப்படுகிறது.
சூரியின் சமீபத்திய கொட்டுக்காளி, கருடன், விடுதலை 2 ஆகிய படங்களில் அவர் நடிப்பு பேசப்பட்ட நிலையில் அந்தப் படங்களும் நல்ல வசூலைப் பெற்றன.
இந்நிலையில், இந்தப் படத்தில் முத்துக்காளி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் முதல்பார்வை போஸ்டர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகுமெனவும் நடிகர் சூரி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
I, as #Muthukaali The game enters into next league ⛵⚓❤️#Mandaadi First Look – Today at 7 PM #Mandaadi#MandaadiFirstLook@sooriofficial@ActorSuhas@elredkumar@rsinfotainment#VetriMaaran@MathiMaaran@gvprakash@Mahima_Nambiar#Achyuthkumar@RavindraVijay1… pic.twitter.com/QAhpunAUBu
— Actor Soori (@sooriofficial) April 19, 2025