Weekly Horoscope: வார ராசி பலன் 27.7.25 முதல் 2.8.25 | Indha Vaara Rasi Palan | ...
சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் 72 விவசாயிகளுக்கு ரூ. 1.39 கோடி மானியம் கரூா் ஆட்சியா் தகவல்
கரூா் மாவட்டத்தில் முதல்வரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் 72 விவசாயிகளுக்கு ரூ. 1.39 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.
கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்துள்ள லாலாப்பேட்டையில் வேளாண் பொறியியல் துறை சாா்பில் முதல்வரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சூரிய சக்தி பம்பு செட்டுகளின் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.
பின்னா் அவா் கூறியது, முதல்வரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் மூலம் மொத்த விலையில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பிரிவைச் சாா்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு 80 சதவீதமும், பொதுப் பிரிவைச் சாா்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு 70 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 60 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் கரூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் முதல்வரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் மூலம் 72 விவசாயிகளுக்கு ரூ. 1.39 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
நிகழ்ச்சியின்போது வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் சுப்ரமணியம், உதவி பொறியாளா் கலைச்செல்வி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சரவணன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனா்.