செய்திகள் :

சூரி: ``இவரின் பயணம் எனக்கு பெரிய பாடம்'' - எம்.எஸ் பாஸ்கரை வாழ்த்திய நடிகர் சூரி

post image

MS பாஸ்கர்

MS பாஸ்கர், தமிழ் திரையுலகின் அற்புதமான கலைஞர் எனக் கூறலாம். நாடகக் கலைஞரான இவர், 1987-ம் ஆண்டு வெளியான திருமதி ஒரு வெகுமதி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தாலும், 2004-ம் ஆண்டு வெளியான எங்கள் அண்ணா படம் இவருக்கான முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

அதைத் தொடர்ந்து நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர், சமீபகாலமாகக் குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.

எம்.எஸ். பாஸ்கர்
எம்.எஸ். பாஸ்கர்

`சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது'

அதில் முக்கியமானது ஹரிஷ் கல்யாணுடன் இவர் நடித்த பார்க்கிங் திரைப்படம். இந்தப் படத்தில் நடித்த எம்.எஸ் பாஸ்கருக்கு 2023-ம் ஆண்டின் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில், நடிகர் சூரி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``கஷ்டங்களும் தியாகங்களும் நிறைந்த பல ஆண்டுகளின் உழைப்பின் பலன் இன்று தேசிய விருதாக மலர்ந்துள்ளது. இவரின் பயணம் எனக்கு ஒரு பெரிய பாடமாகவும் ஊக்கமாகவும் உள்ளது.

இதே துறையில் பணிபுரிந்து, இத்தகைய சிறந்த கலைஞரை கொண்டாடுவதில் பெருமை கொள்கிறேன்." எனப் பதிவிட்டிருக்கிறார்.

"நீ எப்பவும் அவருக்கு விசுவாசமாக இருக்கணும்னு சொல்லிருக்கேன்" - தனுஷாக நடித்த மாஸ்டர் தீகனின் அம்மா

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் 'இட்லி கடை' படம் வரும் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன் உள்ளிட்ட பலர... மேலும் பார்க்க

KPY பாலா: ``பாலாவுக்கு எங்கிருந்து பணம் வந்தால் உங்களுக்கு என்ன?" - சீமான் கேள்வி

KPY பாலா தொடர்ந்து சிலருக்கு உதவி செய்துவருவதை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அவர் உதவி செய்வதற்குப் பின்னணியில் சில திட்டம் இருப்பதாக சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பா... மேலும் பார்க்க

Ravi Mohan: ரவி மோகனின் ஈ.சி.ஆர் இல்லத்திற்கு நோட்டீஸ்! - காரணம் இதுதான்!

தவணைத் தொகை செலுத்தாத காரணத்தினால் சென்னை ஈஞ்சம்பாக்கத்தின் கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள நடிகர் ரவி மோகனின் வீட்டிற்கு தனியார் வங்கி அதிகாரி இன்று (24.09.25) நோட்டீஸ் ஒட்டியிருக்கிறார். Ravi Mohanநடி... மேலும் பார்க்க

Kalaimamani Award: ``இந்த விருது எனக்கு கூடுதல் பொறுப்பைத் தந்திருக்கு" - பாடலாசிரியர் விவேகா பேட்டி

கலை மற்றும் இலக்கியத் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு தமிழக அரசின் உயரிய விருதான கலைமாமணி விருது வழங்கப்படும். தற்போது 2021, 2022, 2023-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதை அறிவித்திருக்கிறார்கள்.இதில் ச... மேலும் பார்க்க

Dhanush: "120 KM தூரம் நடந்தே மதுரைக்கு வந்தாங்க அம்மா; இன்பநிதிக்கு வாழ்த்துகள்"- தனுஷ் பேச்சு

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் 'இட்லி கடை' படம் வரும் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன் உள்ளிட்ட பலர... மேலும் பார்க்க