Mahishasura Mardini Stotram | மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரத்தின் மகிமைகள் என்னென்...
சூறைக் காற்றுடன் மழை: சாலையின் குறுக்கே மரம் விழுந்தது: போக்குவரத்து பாதிப்பு
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே செவ்வாய்க்கிழமை இரவு பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிவகிரி வட்டார பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் வெயில் வாட்டிவதைத்தது. இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால்
மதுரை - கொல்லம் சாலையில் சிவகிரி இரும்பு பாலம் அருகே உள்ள பெரிய மரம் சாலையில் சாய்ந்தது.
இதனால், தென்காசி -மதுரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த வாசுதேவநல்லூா் தீயணைப்பு துறை நிலைய அலுவலா் கருப்பையா , போக்குவரத்து அலுவலா் முருகன் மற்றும் மீட்புப் படையினா் அங்கு சென்று மரத்தை அப்புறப்படுத்தினா்.
இதையடுத்து போக்குவரத்து சீரானது. தீயணைப்புத் துறையினரின் துரித நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.