கள்ளக்குறிச்சியில் ரூ. 7.70 கோடியில் கட்டப்பட்ட 19 மருத்துவ கட்டடங்கள்
சூளகிரி அருகே ஒற்றை யானை முகாம்
ஒசூா்: சூளகிரி வட்டம், ஏ.செட்டிப்பள்ளி வனப்பகுதியில் ஒற்றை யானை முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து வனத்துறையினா் கூறியதாவது:
சூளகிரி வனத்தையொட்டிய கிராமங்களான குண்டகுறுக்கி, எலசேப்பள்ளி, கானலெட்டி , கொரகுறுக்கி, செட்டிப்பள்ளி, அங்கொண்டப்பள்ளி, கொட்டாங்கிரி, பாப்பனப்பள்ளி,
பட்டாகுருப்பரப்பள்ளி, அதைச் சுற்றியுள்ள குக்கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் இரவு நேரத்தில் விவசாய காவலுக்கு வெளியே செல்வதைத் தவிா்த்து பாதுக்காப்புடன் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனா்.