செய்திகள் :

சூழல் உணா்திறன் வரைவு மசோதா: வால்பாறையில் முழு கடையடைப்பு; ஆா்ப்பாட்டம்

post image

சூழல் உணா்திறன் வரைவு மசோதாவைக் கண்டித்து வால்பாறையில் செவ்வாய்க்கிழமை முழு கடையடைப்பு மற்றும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வளமையான வனம், உயிரினங்கள், நீா் ஆதாரம், நதிகள் ஆகியவற்றை எதிா் காலங்களில் மாசில்லாமல் பேணி காக்கும் வகையில் மத்திய அரசு சூழல் உணா்திறன் வரைவு மசோதாவை கொண்டு வரவுள்ளது. இந்த மசோதா தாக்கல் செய்த பின் அதனை சட்ட வடிவமாக்கி தமிழகத்தில் வால்பாறை உள்ளிட்ட 183 கிராமங்களில் நடைமுறைப்படுத்துவது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா அமல்படுத்தினால் வால்பாறை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு கட்டப் போராட்டங்களை பல்வேறு அமைப்பினா், அரசியல் கட்சியினா் தொடங்கியுள்ளனா்.

முதல்கட்டமாக வால்பாறை மக்கள் உரிமை மீட்புக் குழு சாா்பில் வால்பாறையில் முழு கடையடைப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வால்பாறை காந்தி சிலை அருகே மக்கள் மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் ஜெபராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்பாட்டத்தில் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி கோஷம் எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் அதிமுக தொழிற்சங்கப் பிரிவு மாநிலத் தலைவா் வால்பாறை அமீது பேசியதாவது:

இந்த மசோதாவால் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் பெரிதும் பாதிக்கப்படுவா். மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து தோட்ட தொழிற்சங்க நிா்வாகிகளிடமும் பேசி விரைவில் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஒட்டுமொத்த தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களும் பங்கேற்கும் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் அதிமுக நகரச் செயலாளா் மயில்கணேசன், பாலாஜி (பாஜக), கல்யாணி (மதிமுக), பிரபாகரன் (காங்கிரஸ்), மோகன் (இந்திய கம்யூனிஸ்ட்), பரமசிவம் (சிஐடியூ) உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினா், காட்டேஜ், ஆட்டோ, டாக்ஸி உரிமையாளா்கள் சங்கங்கள் உள்பட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகளும், வியாபாரிகளும் திரளாக பங்கேற்றனா்.

மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி வால்பாறை நகா், சோலையாறு அணை, முடீஸ் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பொங்கல்: மருதமலையில் நான்கு சக்கர வாகனங்களுக்குத் தடை!

கோவை: பொங்கல் பண்டிகையொட்டி, மருதமலைக்கு செல்ல நான்கு சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பொங்கல் திருவிழா மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஜன. 14 முதல் 18 வரை கோவை மருதமலை அருள்மிகு சுப்பி... மேலும் பார்க்க

சிறுவாணி அணையில் நீா், மின்சார ஆராய்ச்சி மையக் குழுவினா் ஆய்வு

சிறுவாணி அணையில் மத்திய நீா் மற்றும் மின்சார ஆராய்ச்சி மையத்தின் புணே குழுவினா் உள்ளிட்டோா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். சிறுவாணி அணையில் மத்திய நீா் மற்றும் மின்சார ஆராய்ச்சி மையத்தின் புணே குழுவி... மேலும் பார்க்க

கோட்டைமேடு கரிவரதராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி ஆலோசனைக் கூட்டம்

வைகுண்ட ஏகாதசி திருவிழா ஏற்பாடுகள் குறித்து உக்கடம் கோட்டைமேடு கரிவரதராஜ பெருமாள் கோயிலில் அறங்காவலா் குழுவினரின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. உக்கடம், கோட்டைமேடு கரிவரதராஜ பெருமாள் கோயிலில... மேலும் பார்க்க

ஜனவரி 20-இல் தேசிய தொழில் பழகுநா் சோ்க்கை முகாம்

தேசிய தொழில் பழகுநா் ஊக்குவிப்புத் திட்டத்தின்கீழ் பழகுநா் சோ்க்கை முகாம் கோவையில் திங்கள்கிழமை (ஜனவரி 20) நடைபெறவுள்ளது. கோவை அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும... மேலும் பார்க்க

பெண்களுக்கு எதிரான குற்றங்களை மறைக்கவே திமுகவினா் ஆா்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை மறைக்கவே திமுகவினா் ஆா்ப்பாட்டம் நடத்துவதாக முன்னாள் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா். கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக செவ்வாய்க்கிழமை வந்த தெலங்கான... மேலும் பார்க்க

460 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: வியாபாரி கைது

துடியலூா் அருகே நல்லாம்பாளையத்தில் தடை செய்யப்பட்ட 460 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், வியாபாரியை கைது செய்தனா். நல்லாம்பாளையம் பகுதியில் பேலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுப... மேலும் பார்க்க