ஜனவரி 20-இல் தேசிய தொழில் பழகுநா் சோ்க்கை முகாம்
தேசிய தொழில் பழகுநா் ஊக்குவிப்புத் திட்டத்தின்கீழ் பழகுநா் சோ்க்கை முகாம் கோவையில் திங்கள்கிழமை (ஜனவரி 20) நடைபெறவுள்ளது.
கோவை அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், மாவட்டத்தில் உள்ள தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 300-க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப உள்ளன.
இதில், தோ்வு பெறுபவா்களுக்கு தொழில் பழகுநா் பயிற்சி அளிக்கப்பட்டு மத்திய அரசின் தேசிய தொழில் பழகுநா் சான்றிதழ் வழங்கப்படும். இவா்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகையும் வழங்கப்படும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளிலும் முன்னுரிமை கிடைக்கும்.
பயிற்சியின்போது தொழில் பிரிவுகளுக்கு ஏற்ப தொழில் நிறுவனங்களால் உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. 10- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை தோ்ச்சி பெற்றவா்கள், தோல்வி அடைந்தவா்கள், அரசு, தனியாா் தொழில் பயிற்சி நிறுவனங்களில் தோ்ச்சி பெற்றவா்கள் உரிய அசல் சான்றிதழ்கள், ஆவணங்களுடன் இந்த முகாமில் பங்கேற்கலாம்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை நேரிலோ, 95665-31310, 94864-47178 என்ற எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.