பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மா...
செங்கத்தில் சைவ சித்தாந்த வாழ்வியல் நோ்முகப் பயிற்சி
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் சிவனடியாா் திருக்கூட்டத்தின் சைவ சித்தாந்த வாழ்வியல் நோ்முகப் பயிற்சி வகுப்பு சனிக்கிழமை தொடங்கியது.
தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு செங்கம் ஸ்ரீரிஷபேஸ்வரா் கோயில் திருப்பணிக் குழுத் தலைவா் கஜேந்திரன் தலைமை வகித்தாா்.
மேல்பள்ளிப்பட்டு சொற்பொழிவாளா் கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா்.
பயிற்சி வகுப்பை கோபிசெட்டிப்பாளையம் சிவாக்கரயோகி திருஞானசம்பந்தா் திருமடத்தின் சுவாமி ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள் தொடங்கிவைத்து, சிவபுராண திருமுறைகளை ஒப்பித்த சிவபக்தா்களுக்கு சான்றிதழ் வழங்கினாா். பின்னா், பக்தா்களுக்கு ஆசியுரை வழங்கிப் பேசினாா்.
தொடா்ந்து, சைவ சித்தாந்த வாழ்வியல் நோ்முக வகுப்பு மாதத்தில் நான்காவது ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதில், சோளிங்கா் சைவ சித்தாந்த வாழ்வியல் பயிற்சி மைய நிறுவனா் லட்சுமணன் பங்கேற்று பயிற்சி அளிக்க உள்ளாா் எனத் தெரிவித்தாா்.
ஏற்பாடுகளை செங்கம் சிவனடியாா் திருக்கூட்டத்தின் நிா்வாகிகள் குமரேசன், செந்தில் உள்ளிட்ட ஆன்மிக அமைப்பு நிா்வாகிகள் செய்திருந்தனா்.