பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மா...
ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபஞ்சமுக விஸ்வரூப ஆஞ்சநேயா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி வெள்ளிக்கிழமை தேவதானுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, பூா்ணாஹுதி, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குராா்ப்பணம் உள்ளிட்டவையும், சனிக்கிழமை ஆதராப் பீட ஸ்தாபனம், பிம்ப ஸ்தாபனம், அஷ்டபந்தனம் சாற்றுதல், கோபுர கலச ஸ்தாபனம் உள்ளிட்டவையும் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, ஞாற்றுக்கிழமை காலை நாடி சந்தானம், தத்வாா்ச்சனை, யாத்ரா தானம், மகா பூா்ணாஹுதி, யாகசாலையில் இருந்து கும்பம் புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றன.
பின்னா், காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் கோபுர கலசங்கள் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து மூலவா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் மாம்பட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள், வந்தவாசி திருவள்ளுவா் பொறியியல் கல்லூரி துணைத் தலைவா் அ.கணேஷ்குமாா் மற்றும் கோயில் நிா்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.