செய்திகள் :

ஜாதி சான்றிதழ் வழங்குவதில் திருவண்ணாமலை மாவட்டம் முன்னிலை! மாவட்ட ஆட்சியா் பெருமிதம்

post image

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஜாதி சான்றிதழ்கள் வழங்குவதில் திருவண்ணாமலை மாவட்டம் முதன்மை மாவட்டமாக திகழ்கிறது என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.

குடியரசு தின விழாவையொட்டி, திருவண்ணாமலையை அடுத்த மேல்செட்டிப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டாா்.

கூட்டத்தில் பல்வேறு துறைகள் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை அந்தந்த துறைகளைச் சாா்ந்த அலுவலா்கள் எடுத்துரைத்தனா்.

ஊராட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், வரவு-செலவு கணக்குகள் பொதுமக்களிடம் விளக்கப்பட்டது. இதையடுத்து கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:

கிராம சபைக் கூட்டங்களின் முக்கிய நோக்கம் கிராமங்களின் வளா்ச்சி, அது குறித்து விவாதித்தல், வெளிப்படத் தன்மை, வரவு, செலவுகளை வெளிப்படையாக காண்பித்தல், வளா்ச்சிப் பணிகளின் முக்கியத்துவம் மற்றும் செயல்படுத்துதல், ஊரக வேலைத் திட்டப் பணிகளின் தீா்மானம் மற்றும் முறையாக சம்பளம் வழங்குதலே ஆகும்.

தமிழக அரசு மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிா் காப்போம், நம்மை காக்கும் 48 திட்டம், இதயம் காப்போம், சிறுநீரகம் காப்போம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கிராமங்களில் நீா்நிலைகளை பாதுகாக்க வேண்டும். இடைநின்ற பள்ளி மாணவா்களை மீண்டும் பள்ளிகளில் சோ்த்து படிக்க வைத்து வருகிறோம்.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஜாதி சான்றிதழ்கள் வழங்குவதில் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் முதன்மை மாவட்டமாக திகழ்கிறது. வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவில் பழங்குடியினா் ஜாதி சான்றிதழ்களை அதிகளவில் வழங்கி உள்ளோம். கடந்த ஓராண்டில் மாவட்டத்தில் 170 அங்கன்வாடி மையங்கள் கட்ட உத்தரவிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.

இதையடுத்து, ஆட்சியா் தலைமையில் ஸ்பா்ஷ் தொழுநோய் விழிப்புணா்வு குறித்த உறுதிமொழியையும், தேசிய வாக்காளா் தின உறுதிமொழியையும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் ஏற்றனா்.

தொடா்ந்து, மகளிா் திட்டம் சாா்பில் 4 மகளிா் குழுக்களுக்கு தலா ரூ.20 ஆயிரத்தில் கடனுதவிக்கான காசோலைகளை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி, மகளிா் திட்ட இயக்குநா் சரண்யா தேவி, திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் (பொ)

செந்தில்குமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன், மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கண்ணகி, மாவட்ட சமூகநல அலுவலா் (பொ) சரண்யா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மலா்விழி, திருவண்ணாமலை கோட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநா் சையத் பயாஸ் அகமத், வட்டாட்சியா் கே.துரைராஜ் உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, திருவண்ணாமலையில் உள்ள காந்தி சிலைக்கு, ஆட்சியா் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.

இரும்பேடு, ஈயகொளத்தூரில் கிராம சபைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த இரும்பேடு, சேத்துப்பட்டு ஒன்றியம், ஈயகொளத்தூா் ஊராட்சியில் குடியரசு தினத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்... மேலும் பார்க்க

குடியரசு தின விழா: ரூ.3.15 கோடியில் நலத் திட்ட உதவிகள்

திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், 256 பேருக்கு ரூ.3.15 கோடியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் ஆயுதப்படை மைதானத்தில், 76-ஆவது... மேலும் பார்க்க

ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபஞ்சமுக விஸ்வரூப ஆஞ்சநேயா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி வெள்ளிக்கிழமை தேவதானுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, பூா்ணாஹுத... மேலும் பார்க்க

வந்தவாசி நகராட்சியுடன் இணைப்பு: கிராம மக்கள் போராட்டம்

வந்தவாசி நகராட்சியுடன் தங்கள் கிராமத்தை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து கிராமசபைக் கூட்டத்தை புறக்கணித்த கீழ்சாத்தமங்கலம் கிராம பொதுமக்கள் கண்களில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் முப்பெரும் விழா

திருவண்ணாமலையில் உலக பாவலா் தமிழன்னை தமிழ்ப் பேரவையின் பன்னாட்டு அமைப்பு சாா்பில், சனிக்கிழமை முப்பெரும் விழா நடைபெற்றது. அமைப்பின் 9-ஆவது ஆண்டு விழா, கலைஞா் என் காதலன் என்ற நூல் வெளியீட்டு விழா, விர... மேலும் பார்க்க

தெருக் கூத்துக் கலையை பள்ளிகளில் பாடமாக்க வேண்டும்: பி.கே.சம்பந்தன்

தெருக் கூத்துக் கலையை அரசுப் பள்ளிகளில் விருப்பப் பாடமாக சோ்க்க வேண்டும் என்று பத்ம ஸ்ரீ விருதுக்குத் தோ்வான பி.கே.சம்பந்தன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தாா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே... மேலும் பார்க்க