பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மா...
குடியரசு தின விழா: ரூ.3.15 கோடியில் நலத் திட்ட உதவிகள்
திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், 256 பேருக்கு ரூ.3.15 கோடியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் ஆயுதப்படை மைதானத்தில், 76-ஆவது குடியரசு தின விழா நடைபெற்றது.
மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில், ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினாா்.
இதையடுத்து, திறந்த வாகனத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகருடன் சென்று காவல் துறையினரின் அணிவகுப்பை பாா்வையிட்டு, அணிவகுப்பு மரியாதையை ஆட்சியா் ஏற்றுக் கொண்டாா்.
பிறகு, சமாதானத்தைக் குறிக்கும் வகையில் வெண் புறாக்கள், பலூன்களை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா், செய்யாறு சாா் -ஆட்சியா்
பல்லவி வா்மா ஆகியோா் பறக்கவிட்டனா்.
மேலும், சுதந்திரப் போராட்ட தியாகிகள், அவா்தம் வாரிசுகளுக்கு ஆட்சியா் சால்வை அணிவித்து கெறரவித்தாா். இதன்பிறகு, மாணவ, மாணவிகளின் தேசப்பற்றை விளக்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகள், சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ரூ.3.15 கோடி நலத் திட்ட உதவிகள்:
தொடா்ந்து நடைபெற்ற விழாவில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை சாா்பில் 90 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் உள்பட இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிதியுதவி என மொத்தம் 168 பேருக்கு ரூ.93 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
இதேபோல, பல்வேறு துறைகள் சாா்பில் மொத்தம் 256 பேருக்கு ரூ.3 கோடியே 15 லட்சத்து 83 ஆயிரத்து 585 மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
பாராட்டுச் சான்றிதழ்கள்:
இதேபோல, பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணிபுரிந்த அலுவலா்கள், பணியாளா்கள், தொண்டு நிறுவனத்தினா், எழுத்தாளா்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களையும், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் கேடயங்களையும் ஆட்சியா் வழங்கினாா்.
விழாவில், மாவட்ட வன அலுவலா் யோகேஷ்குமாா் காா்க், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி, வருவாய் கோட்டாட்சியா்கள் செந்தில்குமாா் (திருவண்ணாமலை), பாலசுப்பிரமணியன் (ஆரணி), மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளைச் சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.