பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மா...
வந்தவாசி நகராட்சியுடன் இணைப்பு: கிராம மக்கள் போராட்டம்
வந்தவாசி நகராட்சியுடன் தங்கள் கிராமத்தை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து கிராமசபைக் கூட்டத்தை புறக்கணித்த கீழ்சாத்தமங்கலம் கிராம பொதுமக்கள் கண்களில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வந்தவாசி நகரை ஒட்டி அமைந்துள்ளது கீழ்சாத்தமங்கலம் கிராமம். வந்தவாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட இந்தக் கிராமத்தை வந்தவாசி நகராட்சியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிாம்.
இந்த நிலையில், இந்தக் கிராமத்தில் வந்தவாசி துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஜீவானந்தம், ஊராட்சி செயலா் மகேஷ்குமாா் ஆகியோா் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தை கிராம பொதுமக்கள் புறக்கணித்தனா்.
வந்தவாசி நகராட்சியுடன் தங்கள் கிராமத்தை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து கூட்டத்தை புறக்கணிப்பதாக அவா்கள் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து அவா்கள் கூடி நின்று
நகராட்சியுடன் தங்கள் கிராமத்தை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் சிலா் கண்களில் கருப்புத் துணி கட்டியிருந்தனா்.
இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:
வந்தவாசி நகராட்சியுடன் எங்கள் கிராமத்தை இணைத்தால் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் பறிபோகும். இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறும் அபாயம் உள்ளதால் விவசாயம் பாதிக்கப்படும் என்றனா்.
தகவலறிந்து அங்கு வந்த பொன்னூா் போலீஸாா் சமரசம் செய்ததை அடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.