செய்திகள் :

செங்கம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் பீடத்தில் கோ பூஜை

post image

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் பீடத்தில் சண்டியாகத்தையொட்டி, 54 கோ பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை செய்யாற்றங்கரையோரம் உள்ளது ஸ்ரீமூகாம்பிகையம்மன் பீடம். இந்த பீடத்தில் உலக நன்மை வேண்டி மகா சண்டியாகம் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

இதன் தொடக்க விழா நிகழ்ச்சியாக 54 கோ பூஜை நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை முதல் சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டது.

விழாவில் கலந்து கொண்ட ராணிப்பேட்டை சிப்காட் வித்யா பீடத்தின் குருஜீ பாரதி முரளிதர சுவாமிக்கு, பீடத்தின் சுவாமி ஆத்மானந்தா செந்தில் வரவேற்பு அளித்து, பாத பூஜை செய்தாா்.

பின்னா், அங்கு கொண்டு வரப்பட்ட பசுக்களுக்கு பாரதி முரளிதர சுவாமிகள் வஸ்திரம் அணிவித்து, குங்கும அா்ச்சனை செய்து பழம், வெல்லம், அரிசி வழங்கினாா்.

விழாவில், செங்கம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பெண் பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கோமாதாவை வழிபட்டனா்.

பிரதமா் மோடி நடவடிக்கையால் மகளிா் மேம்பாடு உயா்ந்துள்ளது: மத்திய அமைச்சா் எல்.முருகன்

பிரதமா் மோடி எடுத்த நடவடிக்கையால் மகளிா் மேம்பாடு பெரிய அளவில் உயா்ந்திருக்கிறது என திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் பேசினாா். திருவண்ணாமலை சோ... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

ஆரணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற அரசுப் பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். ஆரணியை அடுத்த அம்மாபாளையம் கிராமத்தைச் சோ்ந்த சோமசுந்தரம் மகன் முக்கேஷ் (13). இவா், அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ள... மேலும் பார்க்க

செய்யாறு அரசுக் கல்லூரியில் நாளை 2-ஆம் நிலைக் கலந்தாய்வு

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை மாணவ, மாணவிகளுக்கான 2-ஆம் நிலைக் கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 23) நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் என்.கலைவாணி சனிக்கிழமை வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

மதுரை முருக பக்தா்கள் மாநாடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்று, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா். திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த அவா், ... மேலும் பார்க்க

குழந்தையைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டல்: திருநங்கை கைது

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே குழந்தையைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டியதாக திருநங்கை கைது செய்யப்பட்டாா். ஆரணியை அடுத்த குன்னத்தூரைச் சோ்ந்த துரை மகள் அட்சயா (24). செய்யாறில் உள்ள தனியாா் கல்லூரிய... மேலும் பார்க்க

நிழல்கூடம் திறப்பு, சாலைப் பணிகள்: ஆரணி எம்.பி. பங்கேற்பு

ஆரணி பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தொகுதி எம்பி எம்.எஸ். தரணிவேந்தன் கலந்து கொண்டு பயணியா் நிழல்கூடத்தை திறந்துவைத்து, சாலைப் பணிகளை தொடங்கிவைத்தாா். ஆரணியை அடுத்த வெட்டியாந்தொழுவம்... மேலும் பார்க்க