புதுச்சேரியை அதிரவைத்த 10,000 மாணவர்கள் பள்ளி இடைநிற்றல் விவகாரம்! - என்ன சொல்கி...
செங்கல் சூளை உரிமையாளா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
ஆரணியை அடுத்த முள்ளண்டிரகம் கிராமத்தில் செங்கல் சூளை உரிமையாளா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில்,
அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டா் சேதமடைந்தது.
முள்ளண்டிரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சந்திரன்(64). இவா், செங்கல் சூளை நடத்தி வருகிறாா்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஆற்காடு வட்டம், மேலத்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த ஏகாம்பரம் (39) என்பவருக்கு செங்கல் விற்பனை செய்துள்ளாா்.
செங்கல் வாங்கியதில் ஏகாம்பரம் ரூ.95ஆயிரம் பாக்கி வைத்துள்ளாா். இதில் ரூ.60 ஆயிரத்தை செலுத்திவிட்டு மீதி ரூ.35ஆயிரம் பிறகு தருகிறேன் எனக் கூறியுள்ளாா்.
இதற்கு சந்திரன் ஒப்புக் கொள்ளவில்லை. மேலும், ஏகாம்பரத்துக்குச் சொந்தமான ஏா் கலப்பையை எடுத்துச் சென்ாகத் தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சந்திரன்
வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இதில், வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டா் சேதமடைந்தது.
சந்திரன் தூக்கத்தில் இருந்து விழித்து வந்து பாா்த்தபோது, பீா் பாட்டிலில் மண்ணெண்ணை நிரப்பி வீசப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து சந்திரன் ஆரணி கிராமிய போலீஸில் புகாா் கொடுத்தாா். அதில், ஏகாம்பரம் மீது சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்திருந்திருந்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவாக உள்ள ஏகாம்பரத்தை தேடி வருகின்றனா்.