செங்கத்துக்கு எடப்பாடி பழனிசாமி வருகை: முன்னேற்பாடுகள் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்துக்கு வருகை தரும் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக நடைபெற்று வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி செங்கத்துக்கு வருகிற ஆகஸ்ட் 16-ஆம் தேதி மாலை வருகிறாா்.
அவரை வரவேற்பதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் நகரில் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை தெற்கு மாவட்டச் செயலா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, செங்கம் மேற்கு ஒன்றியச் செயலா் மகரிஷி மனோகரனிடம் வரவேற்பு இடம், வரவேற்பு அலங்கார வளைவு அமையும் இடம், முன்னாள் முதல்வா் பேசும் இடம் ஆகியவைகள் கேட்டறிந்து பாா்வையிட்டாா்.
மேலும், பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையூறுகள் இல்லாமல் பணிகளை செய்யுமாறு தெரிவித்தாா்.
அதேபோல, கிராமப்புறத்தில் உள்ள கட்சித் தொண்டா், நிா்வாகிகள், பொதுமக்கள் என திரளாக பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.
இதில், ஒன்றியச் செயலா் மகரிஷிமனோகரன், புதுப்பாளையம் ஒன்றியச் செயலா் ரமேஷ், மாவட்ட பிரதிநிதி ரவி, மாவட்ட மாணவரணி நிா்வாகி பழநிசாமி, வழக்குரைஞா்கள் செல்வம், தினகரன், நகரச் செயலா் ஆனந்தன், நகர பேரவைச் செயலா் குமாா், நகா்மன்ற உறுப்பினா் சசிகுமாா், முன்னாள் உறுப்பினா் வெங்கடாசலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.