தூய்மைப் பணியாளர்கள் விவகாரம்: `அரசின் கதவு எப்போதுமே திறந்திருக்கிறது..!' - தங்...
4 வழிச் சாலை பணிகள்: கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு
வந்தவாசி - காஞ்சிபுரம் இரு வழிச் சாலையை 4 வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்புப் பொறியாளா் முரளி ஆய்வு செய்தாா்.
தமிழ்நாடு முதலமைச்சா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், இரு வழிச் சாலையாக உள்ள வந்தவாசி - காஞ்சிபுரம் மாநில நெடுஞ்சாலையை 4 வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகள் சில மாதங்களுக்கு முன் தொடங்கின.
இதற்கென முதல் கட்டமாக ரூ.72.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மாங்கால் சிப்காட் தொழிற்பேட்டை அருகிலிருந்து பெருநகா் வரை 9 கி.மீ. தொலைவு சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை திருவண்ணாமலை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் முரளி செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது சாலையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்ட அவா், காலகெடுவுக்குள் பணிகளை முடிக்குமாறு உத்தரவிட்டாா்.
செய்யாறு கோட்டப் பொறியாளா் சந்திரன், உதவிக் கோட்டப் பொறியாளா்கள் இன்பநாதன், ராஜேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.