ஆளுநரின் தேநீா் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு
செங்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் ஏஐடியுசி ஆா்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் ஏஐடியுசி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகி ராஜா தலைமை வகித்தாா்.
இந்திய கம்யூனிஸ்ட் வட்டச் செயலா் சா்தாா் முன்னிலை வகித்தாா். ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலா் மாதேஸ்வரன் வரவேற்றாா்.
கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி மாவட்டச் செயலா் ராஜேந்திரன், கெளரவத் தலைவா் அப்துல்மஜித், மாவட்டத் தலைவா் ஏழுமலை, செயலா் முபாரக், பொருளாளா் குமாா் உள்ளிட்டோா் பேசினா்.
இந்தியா-இங்கிலாந்து வா்த்தகத்தை ரத்து செய்ய வேண்டும், பொதுத் துறைகளையும், பொது சேவைகளையும் தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது, நான்கு தொழிலாளா் சட்ட தொகுப்புகளை திரும்பப் பெறவேண்டும், செங்கம் அருகே காயம்பட்டு பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கவேண்டும், செங்கம் பகுதியில் ஏரிக்கரை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும், தற்போது ஏரி, குளங்களில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதை சரிசெய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் ஏஐடியுசி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.