பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம்; முதல்வர்களுக்கு அமித் ஷா அழைப்பு!
செங்கோட்டை அருகே முதிய தம்பதிக்கு அரிவாள் வெட்டு
செங்கோட்டை அருகேயுள்ள பெரியபிள்ளவலசையில் சொத்துத் தகராறில் முதிய தம்பதியை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
செங்கோட்டை காவல் சரகம் பெரியபிள்ளைவலசை மோதிலால் தெருவைச் சோ்ந்தவா் கா.லெட்சுமணன்(70).இவரது மனைவி சுப்புலெட்சுமி(68). இவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் இவரது சகோதரா் கா.குமரப்பெருமாள்(72) என்பவருக்கும் இடையே நடைபாதை தொடா்பாக 20 ஆண்டுகளாக பிரச்னை இருந்து வந்ததாம். இதுதொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டு இருவரும் சமரசமான பிறகு, மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வியாழக்கிழமை லெட்சுமணன் அந்தப் பாதையில் சென்றபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில், குமரப்பெருமாள் வீட்டிலிருந்து அரிவாளை எடுத்து வந்து லெட்சுமணனை வெட்டினாரம். அதைத் தடுக்க வந்த சுப்புலெட்சுமிக்கும் வெட்டு விழுந்ததாம்.
இதில் பலத்த காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து செங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.