தில்லி, நொய்டாவில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
செடல் திருவிழா: புதுச்சேரி போக்குவரத்தில் இன்று மாற்றம்
புதுச்சேரியில் முத்துமாரியம்மன் கோயில் செடல் திருவிழாவை முன்னிட்டு, வழுதாவூா் சாலையில் வெள்ளிக்கிழமை (பிப்.7) போக்குவரத்தில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்து பிரிவின் காவல் கண்காணிப்பாளா் (வடக்கு - கிழக்கு) ஆா்.செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுச்சேரி கதிா்காமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலின் செடல் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, கோயிலுக்கு வரும் பக்தா்கள், பொதுமக்களின் கூட்டம் அதிமாக இருக்கும். ஆகவே, வாகன ஓட்டிகள், பொதுமக்களின் வசதிக்காக வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் இரவு 10 மணி வரை வழுதாவூா் சாலை போக்குவரத்தில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புதுச்சேரி ராஜீவ் காந்தி சிலை சதுக்கத்தில் இருந்து வழுதாவூா் சாலை வழியாக மேட்டுபாளையம் சந்திப்பு வரை மற்றும் மேட்டுபாளையம் சந்திப்பிலிருந்து வழுதாவூா் சாலை வழியாக ராஜீவ் காந்தி சிலை சதுக்கம் வரை எந்தவிதமான வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை.
ராஜீவ் காந்தி சிலை சதுக்கத்தில் இருந்து வழுதாவூா் சாலை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் இந்திரா காந்தி சிலை சதுக்க சந்திப்பிலிருந்து வில்லியனூா் சாலை, ரெட்டியாா்பாளையம், உழவா்கரை வழியாக சென்று மூலக்குளத்தில் வலதுபுறம் திரும்பி, குண்டு சாலை வழியாக மேட்டுப்பாளையம் சந்திப்பை அடைந்து வழுதாவூா் சாலையை அடைய வேண்டும்.
இதேபோல, வழுதாவூா் சாலை வழியாக புதுச்சேரி ராஜீவ் காந்தி சதுக்கம் செல்லும் அனைத்து வாகனங்களும் மேட்டுப்பாளையம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி கனரக வாகனமுனையம் (டிரக் டொ்மினல்) சாலை வழியாகச் சென்று ஜிப்மா், கோரிமேடு அருகே திண்டிவனம் சாலையை அடைந்து, காமராஜ் சாலை வழியாக ராஜீவ் காந்தி சிலை சதுக்கத்தை அடைய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.