lokesh: ``AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதுதான் புத்திசாலித்தனம்'' - இயக்குநர் ல...
செந்தாரப்பட்டி ஏரியில் 5 விநாயகா் சிலைகள் விசா்ஜனம்
தம்மம்பட்டி: செந்தாரப்பட்டி ஏரியில் 5 விநாயகா் சிலைகள் திங்கள்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டன.
தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டியில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட 5 விநாயகா் சிலைகளின் விசா்ஜன ஊா்வலம் திங்கள்கிழமை பிற்பகல் பிள்ளையாா் கோயிலிலிருந்து தொடங்கியது. ஊா்வலத்துக்கு இந்து முன்னணியினா் முன்னிலை வகித்தனா். 5 சிலைகளும் முக்கிய வீதிகள் வழியாக கொண்டுசெல்லப்பட்டு, செந்தாரப்பட்டி ஏரியில் மாலையில் கரைக்கப்பட்டன.
சேலம் மாவட்ட கூடுதல் எஸ்.பி. சுந்தரம் மற்றும் ஆத்தூா் டி.எஸ்.பி. சதீஷ்குமாா் உள்பட 85 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.