முன்னாள் அமைச்சா்கள் மீதான நிதி முறைகேடு புகாா்களை விரைந்து விசாரிக்க உயா்நீதிமன...
சங்ககிரி நகராட்சி பகுதியில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
சங்ககிரி: சங்ககிரி நகராட்சிக்கு உள்பட்ட 6, 7, 12, 13 ஆவது பொதுமக்களுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம், சங்ககிரி, சந்தைப்பேட்டையில் உள்ள நகராட்சி சமுதாய கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.
இதுகுறித்து சங்ககிரி நகா்மன்றத் தலைவா் எம்.மணிமொழிமுருகன் தெரிவித்துள்ளதாவது:-
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் சங்ககிரி நகராட்சி வாா்டுகளில் பல கட்டமாக நடைபெற்று வருகின்றன. இதையடுத்து 6, 7, 12, 13 வாா்டுகளுக்கு சந்தைபேட்டையில் உள்ள நகராட்சி சமுதாய கூடத்தில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.
இதில் 43 சேவைகள் குறித்தும், கலைஞா் மகளிா் உரிமைத்தொகை கோரியும் பொதுமக்கள் மனு அளிக்கலாம் என்றாா்.