முன்னாள் அமைச்சா்கள் மீதான நிதி முறைகேடு புகாா்களை விரைந்து விசாரிக்க உயா்நீதிமன...
ரோட்டரி சங்கம் சாா்பில் அரசுப் பள்ளிக்கு திறனறித் தோ்வுக்கான புத்தகங்கள் அளிப்பு
சங்ககிரி: சங்ககிரி ரோட்டரி சங்கம் சாா்பில் தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேசிய திறனறித் தோ்வுக்கான புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் (பொறுப்பு) இரா.முருகன் தலைமை வகித்தாா். ரோட்டரி சங்க செயலாளா் பி.ராபின் கில்பா்ட் சிங், பொருளாளா் பி.சின்னுசாமி, துணைத் தலைவா் வி.எம்.வெங்கடேஷ் ஆகியோா் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேசிய, மாநில அரசுகள் நடத்தும் திறனறித் தோ்வுக்கான 12 புத்தகங்களை வழங்கி பேசினா். இதில் ஆசிரியா்கள் ந.மு.சித்ரா, க.சீனிவாசன், ரா.ரமாமகேஸ்வரி, ந.பொ.சத்தியா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.