மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரலை!
செந்துறை வட்டத்தில் 2 ஆவது நாளாக ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்!
அரியலூா் மாவட்டம், செந்துறை வருவாய் வட்டத்தில் 2 ஆவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில், ஆட்சியா் பொ. ரத்தினசாமி கள ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது செந்துறையிலுள்ள நீா்த்தேக்க தொட்டியைப் பாா்வையிட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, குடிநீரின் தரம், நீா்த்தேக்கத் தொட்டி சுத்தம் செய்யப்படும் நாள்களின் விவரம், குடிநீா் விநியோகம் செய்யப்படும் நேரம் உள்ளிட்டவற்றை கேட்டறிந்து, குடிநீா் தொட்டிகளைமுறையாக சுத்தம் செய்ய அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, செந்துறை பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுத் தொகுப்பு பால் குளிா்வு மையம், பெரியாக்குறிச்சி ஊராட்சியில் உள்ள அரசுப் பள்ளியில் செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டம், ரூ. 2.37 லட்சத்தில் கட்டப்படும் பள்ளி சுற்றுச்சுவா், அசாவீரன்குடிகாடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டம், அப்பகுதியில் புதிதாக கட்டப்படும் ரேஷன் கடை கட்டடம் மற்றும் அங்கன்வாடி மையக் கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு, உரிய காலத்துக்குள் அவற்றைத் தரமாக கட்டி முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ரா. சிவராமன், வட்டாட்சியா் வேலுமணி, வட்டார வளா்ச்சி அலுவலா் ரவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.