சென்செக்ஸ் 454 புள்ளிகள் உயர்வு; 23,345 புள்ளிகளை தொட்ட நிஃப்டி!
மும்பை: இன்றைய வர்த்தகத்தில், இந்திய பங்குச் சந்தையானது வலுவான குறிப்புடன் தொடங்கி, முந்தைய அமர்வின் இழப்புகளை சமன் செய்து நிலையில், நிதி, மின்சாரம் மற்றும் தொலைத் தொடர்பு ஆகிய துறைகள் 0.5 சதவிகித லாபத்துடன் வர்த்தகமானது.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 454.11 புள்ளிகள் உயர்ந்து 77,073.44 ஆகவும், நிஃப்டி 141.55 புள்ளிகள் உயர்ந்து 23,344.75 ஆகவும் நிலைபெற்றது.
நேர்மறையான உலகளாவிய குறிப்புகளின் பின்னணியில், இந்திய பெஞ்ச்மார்க் குறியீடுகள் உயர்ந்து வர்த்தகமான நிலையில் துறை ரீதியாக ஐடி, எஃப்எம்சிஜி மற்றும் ஆட்டோ தவிர, அனைத்து குறியீடுகளும் லாபத்தை பதிவு செய்தன.
டெக் மஹிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பவர் கிரிட், என்டிபிசி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கோடக் மஹிந்திரா வங்கி, விப்ரோ, பஜாஜ் ஃபைனான்ஸ், என்டிபிசி, பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தது.
எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், இண்டஸ் இண்ட் வங்கி, டாடா மோட்டார்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், அதானி போர்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், ட்ரெண்ட், ஹெச்டிஎஃப்சி லைஃப் மற்றும் அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடிந்தது.
கோடக் மஹிந்திரா வங்கி 9 சதவிகிதம் உயர்ந்து, அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 10 சதவிகித வளர்ச்சி அடைந்து ரூ.4,701 கோடியாக உள்ளது.
துறை வாரியாக ஆட்டோ மற்றும் எஃப்எம்சிஜி தவிர, மற்ற அனைத்து குறியீடுகளும் உயர்ந்து முடிந்தது. அதே வேளையில் வங்கி, ஊடகம், உலோகம், மூலதன பொருட்கள், பொதுத்துறை நிறுவனம், டெலிகாம், மின்சாரம், பொதுத்துறை வங்கி ஆகியவை 1 முதல் 2 சதவிகிதம் வரை உயர்ந்தது. மும்பை பங்குச் சந்தையில் மிட்கேப் குறியீடு 0.66 சதவிகிதமும், ஸ்மால்கேப் குறியீடு கிட்டத்தட்ட 1 சதவிகிதமும் உயர்ந்து முடிந்தது.
நிலையற்ற தொடக்கத்திற்குப் பிறகு, சந்தை மேல்நோக்கி சென்று 141.55 புள்ளிகள் உயர்ந்து 23,344.75 ஆக நிஃப்டி முடிந்தது. ஆட்டோ மற்றும் எஃப்எம்சிஜி தவிர பெரும்பாலான துறைகள் உயர்ந்த நிலையில், வங்கி மற்றும் உலோக குறியீடுகள் முதலீட்டாளர்களை வழிநடத்தியது.
இன்று 2,949 பங்குகள் வர்த்தகமான நிலையில், 1,809 பங்குகள் உயர்ந்தும், 1,053 பங்குகள் சரிந்தும் 87 பங்குகள் மாற்றமின்றி முடிந்தது.
ஆசிய சந்தைகளில் டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை உயர்ந்தும் சியோல் சரிந்து முடிந்தது.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.17 சதவிகிதம் குறைந்து 80.65 அமெரிக்க டாலராக உள்ளது.
இதையும் படிக்க: ரூ.2,000 கோடி நிதி திரட்டும் பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி!