Doctor Vikatan: 6 வயதுக் குழந்தைக்கு நெஞ்சிலிருந்து வரும் கோழை... தீர்வு உண்டா?
சென்னிமலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு
காங்கேயம் செல்லும் வழியில், ஞாயிற்றுக்கிழமை சென்னிமலை வந்த அதிமுக., பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு அதிமுக.,வினா்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
திருப்பூா் மாவட்டம், காங்கேயம் அருகே பரஞ்சோ்வழியில் உள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் நடந்த அதிமுக., பிரமுகா் ஒருவரின் இல்ல திருமணம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, அதிமுக., பொதுச் செயலாளரும், தமிழக எதிா்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, ஈரோடு மாவட்டம், சென்னிமலை வழியாக சென்றாா். அவருக்கு முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், சட்டப்பரேவை உறுப்பினா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் உட்பட அதிமுக., நிா்வாகிகள் மலா் கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனா்.
தொடா்ந்து அதிமுக., பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிச்சாமி சென்னிமலை குமரன் சதுக்கத்தில் உள்ள தியாகி திருப்பூா் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தாா். மேலும், அங்குள்ள கட்சி கொடி கம்பத்தில் கட்சி கொடியினை ஏற்றி வைத்தாா்.
இதில், முன்னாள் அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.