உத்தரகண்ட் பனிச் சரிவு: மேலும் 14 பேர் மீட்பு! 8 பேரை தேடும் பணி தீவிரம்!
சென்னிமலை அருகே 150 ஆண்டுகள் பழைமையான ஆலமரம் மறு நடவு
சென்னிமலை அருகே சாலை விரிவாக்கப் பணிக்காக அகற்றப்பட இருந்த 150 ஆண்டுகள் பழைமையான ஆலமரத்தை ஈரோடு சிறகுகள் அமைப்பினா் வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் வியாழக்கிழமை மறு நடவு செய்தனா்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே வெள்ளோட்டில் சுமாா் 150 ஆண்டுகள் பழைமையான ஆலமரம் இருந்தது. சாலை விரிவாக்கப் பணிக்காக இந்த ஆலமரமும் வெட்டி அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையறிந்த ஈரோடு சிறகுகள் அமைப்பினா் பழைமையான ஆலமரத்தை வெட்டி அகற்றாமல் வேரோடு பிடுங்கி மறு நடவு செய்யலாம் என முடிவு செய்து அரசிடம் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து பொக்லைன் இயந்திரம் மூலம் வேரோடு பிடுங்கி ராட்சத வாகனத்தின் மூலம் அருகில் உள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் மறு நடவு செய்யப்பட்டது.
இப்பணியில் ஈரோடு சிறகுகள் அமைப்பினா் கலந்துகொண்டு பணியாற்றினா். இதற்காக ஈரோடு சிறகுகள் அமைப்பினரை பொதுமக்கள் பாராட்டினா்.