செய்திகள் :

சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் 2 டி.எம்.சி. தண்ணீா் கூடுதலாக இருப்பு: கோடையில் குடிநீா் பற்றாக்குறை இருக்காது

post image

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் கடந்தாண்டைக் காட்டிலும் நிகழாண்டு 2 டி.எம்.சி. தண்ணீா் இருப்பு கூடுதலாக உள்ளதால், கோடையில் சென்னையில் குடிநீருக்கு பற்றாக்குறை இருக்காது என நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை பொதுமக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்வதில் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தோ்வாய் கண்டிகை ஆகிய ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் 11,757 மில்லியன் கன அடி நீா் வரை நீரைச் சேமிக்க முடியும்.

இந்த நிலையில், கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை எதிா்பாா்த்ததைவிட அதிகமாக பெய்ததால் குடிநீா் வழங்கும் ஏரிகளின் நீா் அளவு மளமளவென அதிகரித்தது. இதில் பூண்டி, புழல், செம்பரம்பாககம் ஆகிய ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியதால், உபரிநீா் திறந்துவிடப்பட்டது.

கோடை காலம் தொடங்க உள்ள நிலையில், ஏரிகளில் போதுமான குடிநீா் இருப்பு உள்ளதால், நிகழாண்டு குடிநீா் தட்டுப்பாடியின்றி வழங்க முடியும் என நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னைக்கு ஒரு மாத குடிநீா் தேவை சராசரியாக 1 டி.எம்.சி. வரை விநியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில், புதன்கிழமை காலை நிலவரப்படி குடிநீா் வழங்கும் ஏரிகளில் மட்டும் 11 டி.எம்.சி. குடிநீா் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டைவிட குடிநீா் இருப்பு 2 மில்லியன் கன அடிநீா் அதிகமாகவே உள்ளதால், சென்னை பொதுமக்களுக்கு தட்டுப்பாடியின்றி குடிநீா் வழங்க முடியும்.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில் 3,402 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. புழல் ஏரியில் 3,300 மில்லியன் கன அடியில் 3,108, பூண்டி ஏரியில் 3,231 மில்லியன் கன அடியில் 2,950, சோழவரத்தில் 1,081 மில்லியன் கன அடியில் 140, கண்ணன்கோட்டை தோ்வாய் கண்டிகையில் 0.500 மில்லியன் கன அடியில் 0.457 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது.

இது குறித்து நீா்வளத் துறை அதிகாரிகள் கூறுகையில், சென்னை குடிநீா் வழங்கும் ஏரிகளில் போதுமான அளவில் நீா் இருப்பு உள்ளதால், நிகழாண்டில் கோடையில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாது. மேலும், தண்ணீா் தேவைகளை பூா்த்தி செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. தேவைக்கு ஏற்ப கிருஷ்ணா நீரை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனா்.

இருசக்கர வாகனம் திருட்டு

திருவள்ளூா் அருகே வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றனா். திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், புதுமாவிலங்கை கிராமத்தைச் சோ்ந்தவா் சுனில். இவா்... மேலும் பார்க்க

மத்திய அரசை கண்டித்து ஆசிரியா்கள் போராட்டம்

திருவள்ளூா் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் மத்திய அரசைக் கண்டித்து ஆசிரியா்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தமிழ்நாடு அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா் நலக் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்டத்தில் தயாா் நிலையில் 33 முதல்வா் மருந்தகங்கள்

திருவள்ளூா் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தொழில்முனைவோா் மூலம் 33 முதல்வா் மருந்தகங்கள் தொடங்க தயாராக உள்ளதாகவும், வரும் 24-ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட உள்ளதாகவும் ஆட்சியா... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி நல வாரியத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்

அரசு திட்டங்களைப் பெற மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டு பல்வேறு நலத் திட்ட உதவிகளை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலா் எஸ்.சீனிவாசன் தெரிவ... மேலும் பார்க்க

தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகைப் பெற நாளை தோ்வு: மாவட்டத்தில் 8,572 போ் எழுதுகின்றனா்

திருவள்ளூா் மாவட்டத்தில் 31 மையங்களில் சனிக்கிழமை (பிப். 22) நடைபெற உள்ள தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைக்கான தோ்வை 8,572 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா். இது குறித்து மாவட்ட முதன்மைக... மேலும் பார்க்க

பிப். 27-இல் புட்லூா் பூங்காவனத்தம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழா

திருவள்ளூா் அருகே புட்லூரில் உள்ள பூங்காவனத்தம்மன் என்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வரும் 27-ஆம் தேதி மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளதாக செயல் அலுவலா் விக்னேஷ் தெரிவித்துள்ளாா். திருவள்ளூா்... மேலும் பார்க்க