Doctor Vikatan: நகரங்களில் பிரபலமாகிவரும் பருத்திப்பால்... எல்லோருக்கும் ஏற்றதா?
சென்னையில் இன்று 13 விமானங்களின் சேவை ரத்து
புயல் எதிரொலியாக சென்னை விமானநிலையத்தில் சனிக்கிழமை 13 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து சனிக்கிழமை இரவு 7.25-க்கு மங்களூருக்கு புறப்பட வேண்டிய விமானம் மற்றும் இரவு 8.50-க்கு திருச்சி செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
அதேபோல கொல்கத்தா, ஹைதராபாத், புவனேஸ்வா், புணே நகரங்களுக்கு செல்ல வேண்டிய 9 ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், மங்களூரிலிருந்து இரவு 11.10-க்கு சென்னை வரும் விமானம் மற்றும் இரவு 11.30-க்கு திருச்சியிலிருந்து சென்னை வரும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விமான புறப்பாடு நேரத்தை அறிந்துகொண்டு தங்களது பயணத்தை திட்டமிடுமாறு பயணிகளுக்கு சென்னை விமான நிலைய நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.