செய்திகள் :

சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

post image

சென்னையில் கார்ல் மார்க்ஸுக்கு உருவச் சிலை அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்று கொண்டிருக்கும் அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாநாட்டில் இன்று முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ளவுள்ள நிலையில், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

”உலக மாமேதை கார்ல் மார்க்ஸை பெருமைப்படுத்திட திமுக அரசு விரும்புகிறது. உலக தொழிலாளர்களே ஒன்றுகூடுங்கள் என்ற பிரகடனத்தை வடிவமைத்தவர் கார்ல் மார்க்ஸ். வரலாற்றை மாற்றியமைத்த சிலரில் தலைமகனாகப் போற்றப்படுபவர் கார்ல் மார்க்ஸ்.

அவரது நினைவு நாளான மார்ச் 14 ஆம் நாள் தமிழக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தோம். இந்தியா ஒரு காலத்தில் மறுமலர்ச்சி அடையும் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம் என எழுதியவர் மார்க்ஸ்.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மார்க்ஸின் சிலை நிறுவப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டாவது அறிவிப்பாக அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் தலைவரும் உறங்கா புலி எனப் போற்றப்பட்டவருமான மூக்கையா தேவருக்கு நாளை 103 ஆவது பிறந்த நாள்.

மதுரை உசுலம்பட்டியில் பிறந்த அவர், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நம்பிக்கை பெற்று ஃபார்வர்ட் பிளாக் கட்சியில் இணைந்தார். உசுலம்பட்டியில் பலமுறை தேர்தலில் நின்று வெற்றி பெற்று மக்கள் நாயகனாக திகழ்ந்தவர்.

அவருக்கு உசுலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க : வக்ஃப் மசோதாவுக்கு எதிராக வழக்கு: கருப்பு பட்டை அணிந்து முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வர்! ஒப்புதல் பெற்ற 10 மசோதாக்களில் இருப்பது என்ன?

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றம் தன்னுடைய சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்ப்பளித்திருக்கும் நிலையில், பல்கலைக்கழகங்களின் வேந்தராகி... மேலும் பார்க்க

தமிழகத்தில் 3 டிகிரி வரை வெப்பநிலை உயரும்!

தமிழகத்தில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நி... மேலும் பார்க்க

அவதூறு வழக்கில் சீமான் ஆஜர்! ஆதாரங்கள் ஒப்படைப்பு!

திருச்சி டிஐஜி தொடர்ந்த அவதூறு வழக்கில், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்காக இன்று(ஏப். 8) ஆஜரானார்.திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் (டிஐஜி) வீ. வருண்குமாா் மற்றும் அவரத... மேலும் பார்க்க

டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

சென்னை: டாஸ்மாக் அலுவலகத்தில் நடந்த அமலாக்கத் துறை சோதனைக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றத்தை இழிவுபடுத்துவதாக தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.டாஸ்மாக் அலுவலகத்தில் அமலா... மேலும் பார்க்க

பல்கலை. துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கு அதிகாரம்: வழக்குரைஞர் வில்சன்

சென்னை: ஆளுநர் கிடப்பில் வைத்திருந்த மசோதாக்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக, தங்களது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பல்கலை. துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரச... மேலும் பார்க்க

நெல்லையில் இளைஞர் அடித்துக் கொலை: உடலைத் தோண்டி எடுத்த காவல் துறை!

நெல்லையில் 20 வயது இளைஞரை அடித்துக் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை மாநகர குருநாதன் கோவில் விளக்கு அருகே ஆறுமுகம் என்ற இளைஞரைக் கொலை செய்து, புதைத்திருப்பதா... மேலும் பார்க்க