சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து!
சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
ஆவடியில் இருந்து சென்னை கடற்கரை சென்ற மின்சார ரயில் ராயபுரம் அருகே ரயில் பெட்டியின் இருசக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு இறங்கி விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்பட இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, சீரமைப்பைப் பணிகளை தெற்கு ரயில்வே அதிகாரிகள் மேற்கொண்ட நிலையில், சில மணி நேரம் பாதிக்கப்பட்ட மின்சார ரயில் இயக்கம், தற்போது சீராகியுள்ளது.
இவ்விபத்துக்கான காரணம் குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: பேரவையில் கடும் அமளி! அதிமுக வெளிநடப்பு!