செய்திகள் :

``சென்னையும், கோவையும் `இப்படி' கேட்டால் என்ன செய்வது?'' - நிர்மலா சீதாராமன் சொல்வது என்ன?

post image

சென்னையில் நேற்று மத்திய பட்ஜெட் குறித்த நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்படும் வரிகள் குறித்து பேசினார். அதில்,

"தமிழ்நாட்டில், 'நாங்க தான் அதிக வரி கொடுக்குறோம். நாங்க கொடுக்குற ஒரு ரூபாயில 7 பைசாக்கூட எங்களுக்கு நீங்க திருப்பி தர்றதில்லை' என்ற குரல்கள் எங்கிருந்து வருகின்றன என்று தெரியவில்லை. சாலை, ரயில்வே போன்ற கட்டமைப்பு வசதிகளுக்கு மத்திய அரசு பணம் கொடுக்கிறது.

``சென்னையும், கோவையும் `இப்படி' கேட்டால் என்ன செய்வது?'' - நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

அரியலூர், கோவில்பட்டி...

நாட்டில் உள்ள 25 சதவகித எலக்ட்ரானிக் உற்பத்தி தொழிற்சாலைகள் இங்கு தான் இருக்கின்றன. வரி குறித்து கொஞ்சம் ஏளனமாக சொல்ல வேண்டுமானால், தமிழ்நாட்டிற்கு சென்னையும், கோவையும் தான் அதிக வரி கொடுக்கின்றது. அரியலூர் மற்றும் கோவில்பட்டியில் இருப்பவர்கள் எங்களுக்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டால், சென்னையும், கோவையும், 'நாங்க தான் பணம் கொடுக்குறோம். அதனால, எங்களுக்கு பணம் திருப்பி கொடுங்க. அங்கே செலவு செய்யாதீர்கள்' என்று சொல்ல வேண்டும். ஆனால், இந்தியாவில் அந்த மாதிரியான பாலிசிகள் இல்லை" என்று பேசியுள்ளார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`இந்துக்கள் பாதுகாப்பாக இருந்தால், முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு’ - யோகி ஆதித்யநாத் பேச்சு

இந்தியா மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவரும், ஹைதராபாத் மக்களவைத் தொகுதியின் எம்.பியுமான அசாதுதீன் ஒவைசி, சமீபத்தில் 'பா.ஜ.க'வின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து, "முஸ்லிம்கள் ஆபத்தில் ... மேலும் பார்க்க

பெருகும் மாற்று மாசு; `ரூ.858 கோடி கொடுத்தும் ஏன் 1% கூட பயன்படுத்தவில்லை'- நாடாளுமன்றக் குழு கேள்வி

கடந்த சில மாதங்களாகவே, இந்தியாவில் காற்று மாசுபாடு அதிகமாக இருந்து வருகிறது. இதற்கு தீபாவளிக்கு பிறகு 'டெல்லி எப்படி இருந்தது' என்பதே சரியான உதாரணம். இது குறித்து, நாடாளுமன்றக் குழு கொடுத்துள்ள அறிக்க... மேலும் பார்க்க

வெளிநாடு செல்லும் சென்னை அதிகாரிகள்; 'இந்தூருக்கு செல்லுங்கள்' - கார்த்தி சிதம்பரம் அதிருப்தி

சென்னையில் தினமும் கிட்டதட்ட 5,200 மெட்ரிக் டன் குப்பைகள் தினமும் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் இருக்கும் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்தக் குப்பைகள் பல வகைகளில் மாற்றி பயன்படுத்தப்படுகிற... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: 24 மணி நேரமும் திக்... திக்; அபாய சாலை... அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்!

திருப்பத்துாரில் இருந்து பெரிய ஏரி வழியாக திருமால் நகர், மிட்டூர், ஆண்டியப்பனுார், ஆலங்காயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குப் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் அரசு மற்றும் தனியார்த் துறை ஊழியர்கள், தொழிலாள... மேலும் பார்க்க

நமக்குள்ளே... - அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ‘கொடூர’ தீர்ப்பு

சில நீதிபதிகளின் அறம் பிறழ்ந்த தீர்ப்புகள், சட்டத்தின் மீதும், நீதிமன்றங்களின் மீதும் மக்களை நம்பிக்கை இழக்கச் செய்வதுடன், ரௌத்திரம் கொள்ளச் செய்கின்றன. சமீபத்திய அதிர்ச்சி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தி... மேலும் பார்க்க

Kerala: ``நாட்டுக்காக தியாகம் செய்தவர்தான் சாவர்க்கர்..'' - SFI பேனரால் ஆவேசமான கேரள கவர்னர்

கேரள மாநிலத்தில் இப்போதைய கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரும், ஆளும் சி.பி.எம் அரசும் இணக்கமாக உள்ளது. கடந்த வாரத்தில் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை, கேரள கவர்னர் மற்றும் முதல... மேலும் பார்க்க