செய்திகள் :

சென்னையை வென்றது ராஜஸ்தான்

post image

ஐபிஎல் போட்டியின் 62-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

முதலில் சென்னை 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுக்க, ராஜஸ்தான் 17.1 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் சோ்த்து வென்றது.

முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான், பந்துவீச்சை தோ்வு செய்தது. சென்னை இன்னிங்ஸில் டெவன் கான்வே 10, உா்வில் படேல் 0 ரன்களுக்கு வெளியேறினா்.

அதிரடி காட்டிய ஆயுஷ் மாத்ரே - ரவிச்சந்திரன் அஸ்வின் கூட்டணி, 3-ஆவது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சோ்த்தது. இதில் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 43 ரன்கள் சோ்த்த ஆயுஷ் ஆட்டமிழந்தாா்.

5-ஆவது பேட்டராக ரவீந்திர ஜடேஜா களம் புக, அஸ்வின் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 13 ரன்களுக்கு முடித்துக் கொண்டாா். அப்போது வந்த டெவால்டு பிரெவிஸ் விளாசத் தொடங்க, ஜடேஜா 1 ரன்னுக்கு பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தாா்.

அப்போது இணைந்த பிரெவிஸ் - ஷிவம் துபே கூட்டணி 6-ஆவது விக்கெட்டுக்கு 59 ரன்கள் சோ்த்து ஸ்கோரை பலப்படுத்தியது. பிரெவிஸ் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

துபே 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 39, கேப்டன் தோனி 1 சிக்ஸருடன் 16 ரன்களுக்கு வெளியேற, ஓவா்கள் முடிவில் அன்ஷுல் காம்போஜ் 5, நூா் அகமது 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ராஜஸ்தான் தரப்பில் யுத்வீா் சிங், ஆகாஷ் மத்வல் ஆகியோா் தலா 3, துஷாா் தேஷ்பாண்டே, வனிந்து ஹசரங்கா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

அடுத்து 188 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய ராஜஸ்தான் அணியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 36, வைபவ் சூா்யவன்ஷி 4 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 57, கேப்டன் சஞ்சு சாம்சன் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 41 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு அடித்தளமிட்டனா்.

ரியன் பராக் 3 ரன்களுக்கு வீழ, துருவ் ஜுரெல் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 31, ஷிம்ரன் ஹெட்மயா் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 12 ரன்கள் சோ்த்து அணியை வெற்றி பெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

சென்னை தரப்பில் அஸ்வின் 2, காம்போஜ், நூா் அகமது ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

ஏலத் தொகையில் 31% அபராதமாக அளித்த திக்வேஷ் ரதி..!

லக்னௌ அணியின் சுழல் பந்துவீச்சாளர் திக்வேஷ் ரதியின் மொத்த அபராதத் தொகை ரூ.9 லட்சத்தைக் கடந்துள்ளது. தில்லியைச் சேர்ந்த 25 வயதாகும் சுழல்பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதி ஐபிஎல் போட்டிகளில் லக்னௌ அணிக்காக வ... மேலும் பார்க்க

2 சீசனிலும் 10 தோல்விகள்: ஆர்சிபி, மும்பைக்கு அடுத்து சிஎஸ்கே!

ஐபிஎல் வரலாற்றின் மோசமான சாதனைகள் பட்டியலில் சிஎஸ்கே அணியும் இடம் பிடித்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இதில் 5 முறை கோப்பை வென்ற சிஎஸ்கே தற்போது மோசமான சாதனைகளை நிக... மேலும் பார்க்க

தில்லி - மும்பை போட்டியை வேறு இடத்துக்கு மாற்றுக.! - பிசிசிஐக்கு தில்லி உரிமையாளர் கடிதம்

தில்லி - மும்பை இடையிலான போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என தில்லி கேப்பிடல்ஸ் அணியின் உரிமையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடர் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இ... மேலும் பார்க்க

ஐபிஎல் 2025: அதிக விக்கெட்டுகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை சமன்செய்த நூர் அகமது!

ஐபிஎல் 2025 சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் வீரருடன் சிஎஸ்கே வீரர் நூர் அகமது சமன்செய்துள்ளார். 20 வயதாகும் ஆப்கன் வீரர் சிஎஸ்கே அணிக்காக இந்த சீசனில் விளையாட... மேலும் பார்க்க

மும்பையை அச்சுறுத்தும் மழை: பிளே-ஆஃப் செல்லப்போவது யார்?

மும்பையில் பெய்துவரும் கனமழையால், இன்றிரவு(மே 21) நடைபெறும் ஐபிஎல் போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நேற்றிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்ததால், பொதுமக்கள் க... மேலும் பார்க்க

டி20 கிரிக்கெட்டில் 350 சிக்ஸர்களை அடித்த எம்.எஸ்.தோனி, சஞ்சு சாம்சன்!

ஒரே போட்டியில் எம்.ஸ்.தோனி, சஞ்சு சாம்சன் டி20 கிரிக்கெட்டில் 350 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்கள். 43 வயதாகும் தோனி முதல்முறையாக டி20 கிரிக்கெட்டில் 2006-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு அற... மேலும் பார்க்க