செய்திகள் :

'சென்னை அரவிந்த் ஶ்ரீனிவாஸ் முதல் திண்டுக்கல் மகரிஷி வரை' - டெக் உலகை ஆளும் தமிழர்கள் லிஸ்ட்

post image

தமிழ்நாட்டைச் சேர்ந்த டெக்கீஸ் பலரும் டெக் உலகில் பெரும் சாதனைகளைச் சத்தமில்லாமல் நிகழ்த்தி வருகின்றனர்.

'Perplexity AI, Comet AI Browser'களை அறிமுகப்படுத்தி AI உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் சென்னையைச் சேர்ந்த அரவிந்த் ஶ்ரீனிவாஸ் தொடங்கி, 'AI' மூலம் தமிழ் வழி ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் 'Supernova' செயலியை உருவாக்கிய திண்டுக்கல் மகரிஷி வரை பலரும் இன்றைய டெக் உலகை ஆளத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அவர்களைப் பற்றிய சிறிய அறிமுகங்களைப் பார்க்கலாம்.

சுந்தர் பிச்சை, ஆரவிந்த் ஶ்ரீனிவாஸ், ரஹ்மான்
சுந்தர் பிச்சை, ஆரவிந்த் ஶ்ரீனிவாஸ், ரஹ்மான்

சமீபத்தில் 'Google Chrome'-யை விலை பேசி உலக டெக் நிறுவனங்களைத் திரும்பிப் பார்க்க வைத்தவர்தான் இந்த சென்னை பையன் அரவிந்த் ஶ்ரீனிவாஸ்.

இப்போதைய டெக் உலகின் AI ரேஸில், ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் அரவிந்த் ஶ்ரீனிவாஸ் (30), சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சென்னை ஐஐடியில்தான் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் B.Tech மற்றும் M.Tech படிப்புகளை முடித்திருக்கிறார்.

கம்ப்யூட்டர், மெஷின் லேர்னிங் படிப்பின் மேல்தான் அவருக்கு அதிகமாக கவனம். பாதை மாறினாலும் இலக்கு மாறக்கூடாது என எலெக்டரிகல் இன்ஜினியரிங் படித்திருந்தாலும், PhD ஆராய்ச்சிப் படிப்பை கம்ப்யூட்டர் சயின்ஸில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பண்ணியிருக்கிறார்.

எலெக்டரிகல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் என வெவ்வேறாகப் படித்ததைச் சருக்கலாக எடுத்துக் கொள்ளாமல் அந்த இரண்டையும் கற்றது அவருக்கு மெஷின் லேர்னிங்கில் பெரும் பலத்தைக் கொடுத்தது. எலெக்டரிகல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டிலும் சிறந்து விளங்கி, இரண்டு படிப்புகளின் ஆற்றலை ஒன்றிணைத்து செயற்கை நுண்ணறிவு ரோபோடிக்ஸ், மெஷின் லேர்னிங்கில் இப்போது கலக்கிக் கொண்டிருக்கிறார்.

'Chat GPT' உருவாக்கும் முதலீட்டாளர்களில் ஒருவரான ஜான் ஷுல்மேன், அரவிந்த் ஶ்ரீனிவாஸின் திறமையை அடையாளம் கண்டு, 'OpenAI' நிறுவனத்தில் AI தொழில்நுட்பத்தில் கற்றுத் தேர்ந்தார்

அஷோக் எல்லுசுவாமி - டெஸ்லா
அஷோக் எல்லுசுவாமி - டெஸ்லா

டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோ பைலட் குழுவின் தலைவராகப் பதவி வகித்து வருபவர் அசோக் எல்லுசாமி.

சென்னையைச் சேர்ந்த இவர், கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 2005-2009 பேட்சில் மின்னணு, தகவல்தொடர்பில் பொறியியல் பட்டம் பெற்றார். பிறகு, அமெரிக்க கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகத்தில் ரோபோடிக் சிஸ்டம்ஸ் படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றார்.

இதையடுத்து 'வோல்ஸ்வேகன்' கார் நிறுவனத்தில் பணியாற்றிய அசோக் எல்லுசாமி, கடந்த 2014-ம் ஆண்டில் எலான் மஸ்கின் டெஸ்லா கார் நிறுவனத்தில் இணைந்தார்.

2022-ம் ஆண்டில் டெஸ்லா நிறுவனத்தின் ஓட்டுநர் இல்லாத காரைத் தயாரிக்க சிறப்புக் குழு உருவாக்கப்பட்டது. அந்தக் குழுவின் தலைவராக அசோக் எல்லுசாமி நியமிக்கப்பட்டார்.

டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க், "அசோக் எல்லுசாமிக்கு நன்றி. டெஸ்லா ஏஐ/ஆட்டோபைலட் குழுவில் முதல் நபராக அவர் இணைந்தார். அதன்பிறகு அந்தக் குழுவின் தலைவராக உயர்ந்தார். அவரும் அவரது குழுவும் இல்லையென்றால் டெஸ்லா இல்லை" என்று கூறி உலகளவில் அசோக் எல்லுசாமியைத் திரும்பிப் பார்க்க வைத்தார்.

கிரீஷ் மாத்ருபூதம் - Freshworks
கிரீஷ் மாத்ருபூதம் - Freshworks

கிரீஷ் மாத்ருபூதம், மென்பெருள் க்ளவுட் கம்யூட்டிங்கான 'SaaS' துறையில் சிறந்து விளங்குபவர். அப்லிகேஷன்களை முழுமையாக பணம் கட்டி வாங்காமல், அதை மாதம் மாதம் சப்ஸ்கிரிப்ஸன் அடிப்படையில் விநியோகம் செய்வதுதான் 'SaaS'. மெடிக்கல், பிஸ்னஸ், கல்வி, நிதி உள்ளிட்ட நிறுவனங்களில் இதன் சேவை முக்கியப் பங்காற்றி வருகிறது.

இந்தத் துறையில் 'Freshworks' என்ற நிறுவனத்தைத் தொடங்கி, 66,000க்கும் மேலான வாடிக்கையாளர்களைக் கொண்டு முன்னணி நிறுவனமாக உருவாக்கியவர் திருச்சியைச் சேர்ந்த கிரீஷ் மாத்ருபூதம். இந்த நிறுவனத்தில் வேலை பார்த்த பலரும் இன்று பல்வேறு நிறுவனங்களைத் தொடங்கி பில்லியன் கணக்கில் பிஸ்னஸ் மதிப்பைப் பெற்றுள்ளனர்.

விவேக் ரவிசங்கர் HackerRank
விவேக் ரவிசங்கர் HackerRank

விவேக் ரவிசங்கர் திருச்சி NIT யில் கணினி அறிவியலில் பட்டம் பெற்றவர். மென்பொறியாளராக முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைத் தேடுபவர்களுக்கு, இவரது 'HackerRank' நிறுவனம் டெஸ்ட் வைக்கிறது. மதிப்பெண்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் திறமையை மட்டுமே வெளிப்படுத்தும் வகையில் இந்த டெஸ்ட்டை நடத்துகிறார்கள்.

அந்த டெஸ்ட்டில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 'Amazon', 'Flipkart', 'Apple' உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை உண்டாக்கித் தருகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் 2 கோடிக்கும் மேலான இன்ஜினியர்களுக்கு வேலை வாங்கித் தந்திருப்பதாகக் கூறுகிறார்கள்.

உலகின் பல முன்னணி நிறுவனங்கள் இவரின் 'HackerRank' நிறுவனத்தில் பயற்சி முடித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வேலைக்கு எடுக்கிறார்கள்.

'HackerRank' நிறுவனமும், முன்னணி நிறுவனங்களுக்குத் தேவையான திறமையாளர்களை அடையாளம் கண்டு, வேலைக்கு ஆள் எடுப்பதில் உதவி செய்து வருகிறது. இன்று உலகம் முழுவதும் 'Amazon, Quora, Apple' உள்ளிட்ட குறைந்தது 2000க்கும் மேலான நிறுவனங்களுக்கு மென்பொறியாளர்களைப் பணிக்கு எடுப்பதில் உதவி வருகிறது விவேக் ரவிசங்கர் இந்த 'HackerRank' நிறுவனம்.

இந்தியாவிலிருந்து திறமையான தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு சர்வதேச வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்பதே விவேக் ரவிசங்கரின் நோக்கமாம்.

சுவாமி சிவசுப்ரமணியன்
சுவாமி சிவசுப்ரமணியன்

அமேசான் வெப்சர்வீஸில் (AWS) 'Agentic AI' மற்றும் டேட்டா சேவைகளுக்கான துணைத் தலைவராக (VP) இருக்கிறார் சுவாமி சிவசுப்ரமணியன். 'cloud, data, AI' உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர். சுவாமி சிவசுப்ரமணியன் கணினித்துறையில் PhD பட்டம் பெற்றவர்.

2005-ஆம் ஆண்டில் அமேசானில் cloud மற்றும் AI துறையில் பணிக்குச் சேர்ந்தார். அவர் எழுதிய 'Amazon Dynamo' புத்தகம், DynamoDB, RDS, S3, மற்றும் தனிப்பட்ட முறையில் உருவாக்கிய 'Amazon SageMaker' போன்றவை உலகளவில் கவனம் ஈர்த்தவையாகும். 'Agentic AI' என்னும் புதிய தொழில்நுட்பம் மூலம், 'cloud' அடிப்படையிலான, தானாக 'decision-making' செய்யும் AI தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் பெரும் பங்காற்றி வருகிறர் சென்னையைச் சேர்ந்த சுவாமி சிவசுப்ரமணியன்.

கணேஷ் ராதாகிருஷ்ணன்
கணேஷ் ராதாகிருஷ்ணன்

'AR/VR' துறையில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்த 'FEKKI.io', 'wharfedale' நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் CEO.

இவர் பல சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அறிவுரையாளராக இருந்து வருகிறார். 'AI' தொழில்நுட்பத்தையே பழையது என்று சொல்லும் இவர், 'Quantum + AI' அடுத்த கட்ட தொழில்நுட்ப வளர்ச்சியாக 'AI' தானாகவே சிந்தித்து செயல்படுத்தும் ஆற்றலோடு உருவாக்குவதாகக் கூறுகிறார்.

'AGI (Artificial General Intelligence)' மற்றும் 'Quantum+AI' குறித்த ஆராய்ச்ச்சிகளில் பல்வேறு நிறுவனங்களும் சேர்ந்து பணியாற்றி வருகிறார். உலக தொழில்நுட்ப துறையில் வழிகாட்டும் நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த கணேஷ் ராதாகிருஷ்ணன்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகரிஷி. IIT மெட்ராஸில் 'B.Tech' மற்றும் 'M.Tech' படிப்புகளை முடித்த இவர், ஆன்லைன் உணவு டெலிவரி செயலியின் உருவாக்கத்தில் பணியாற்றியிருக்கிறார்.

கணேஷ் ராதாகிருஷ்ணன்
கணேஷ் ராதாகிருஷ்ணன்

இப்போது தமிழ் வழியாக ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் 'Supernova AI' செயலியை உருவாக்கி பிரபலமாகியிருக்கிறார். 2021-இல் நிறுவப்பட்ட இந்த 'Supernova AI' இந்தியாவின் முன்னணி AI செயலிகளில் ஒன்றாக வளர்ந்திருக்கிறது. 'AI' மூலம் ஆங்கிலம் கற்றுத் தர வெளிநாட்டு நிறுவனங்கள் பல போட்டியில் இருக்கும்போது, தமிழ் மூலம், இயல்பான தமிழ் பேசும் 'AI' செயலியை உருவாக்கி டெக் உலகில் கொடி கட்டிப் பறக்கிறார் மகரிஷி.

உலகின் முன்னணி மின்னணு உற்பத்தி நிறுவனமான Flex நிறுவனத்தின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றுபவர் ரேவதி அத்வைதி. சென்னையில் பள்ளிப் படிப்பு முடித்து, பிர்லா தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டம் பெற்றவர்.

ரேவதி அத்வைதி
ரேவதி அத்வைதி

'Flex' நிறுவனத்தின் திடமான வளர்ச்சியில் உறுதிகொண்டு பணியாற்றி, 170,000+ ஊழியர்களை நிர்வாகம் செய்து, 30+ நாடுகளில் Flex நிறுவனத்தை உலகம் முழுவதும் விரிவுபடுத்துவதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். 'Uber, MIT, Catalyst' உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளில் இருந்து வருகிறார்.

இவர், கூகுளின் நிறுவனர் குழு உறுப்பினர் மற்றும் முதலீட்டாளர். கூகுள் தொடக்கக் காலத்திலேயே முதலீடு செய்து, அதன் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.

சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் பட்டம் பெற்று  அமெரிக்காவில் நெட்ஸ்கேப்பில் நிர்வாகியாகப் பணியாற்றினார்.

கவிதார்க் ராம் ஸ்ரீராம்
கவிதார்க் ராம் ஸ்ரீராம்

1998ஆம் ஆண்டே கூகுளின் ஆரம்ப முதலீட்டாளர்களில் ஒருவரானார். கூகுள் ஸ்டார்ட் அப் நிறுவனமாகத் தொடங்கி உலக முன்னணி நிறுவனமாக வளர்ச்சியடைந்த காலம்வரை துணை நின்றவர். கூகுளின் தாய் நிறுவனமான Alphabet Inc-ன் இயக்குநர் குழுவிலும் இருந்தவர் ஸ்ரீராம்.

சுந்தர் பிச்சை பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். தமிழ்நாட்டில் சாதாரண குடும்பப் பின்னணியிலிருந்து வந்து இன்று கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) பணியாற்றுபவர். சென்னை அசோக் நகர் ஜவஹர் வித்யாலயாவிலும், மெட்ராஸ் ஐ.ஐ.டி-யின் வனவாணி பள்ளியிலும் படித்தவர். ஐ.ஐ.டி கரக்பூரில் இன்ஜினீயரிங், அமெரிக்க ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மாஸ்டர்ஸும், வார்டன் ஸ்கூலில் எம்.பி.ஏ-வும் முடித்தவர்.

சுந்தர் பிச்சை Google AI hub
சுந்தர் பிச்சை Google AI hub

2004-ல் கூகுள் டூல் பார் (Tool bar) புராடெக்ட் மேனேஜராக வேலைக்குச் சேர்ந்தவர், தன்னுடைய திறமையால் தொடர்ச்சியாக அந்நிறுவனத்தின் அடுத்தடுத்த பதவிகளுக்கு முன்னேறினார். 2015-ல் கூகுளின் தலைமை நிர்வாகியாக உயர்ந்தார். 2019-ல் கூகுளின் தாய் நிறுவனமான Alphabet Inc-ன் தலைமை நிர்வாக அதிகாரியானர். இன்று டெக் உலகத்தில் அதிக சம்பளம் வாங்கும் தமிழராகப் பலருக்கும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.

இதுதவிர 'arattai', 'zohomail', 'ulaa browser' என அறிமுகப்படுத்தியதில் டெக் உலகில் அடுத்த கட்டப் பாய்ச்சலை நிகழ்த்தி வரும் சோஹோ நிறுவனத்தின் தலைவர்  ஸ்ரீதர் வேம்பு.

இப்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த டெக் ஜாம்பவான்கள் பலரும் இன்று டெக் உலகையே திரும்பிப் பார்க்க வைத்து சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உங்களுக்குத் தெரிந்த டெக் ஜாம்பவான்களின் லிஸ்ட்டையும் கமெண்டில் பதிவிடுங்கள்

Gita-GPt: கடவுளிடமே பேசுவதாக நம்பும் மக்கள்; இது எப்படி ஆன்மிக அறிவுரைகளை வழங்குகிறது?

தொழில்நுட்ப வளர்ச்சியில் சாட் ஜிபிடியின் பங்கு அதிகமாக உள்ளது. கல்வி, அறிவியல் தாண்டி தற்போது ஆன்மிக தளத்துக்கும் புதுமைப் போக்கை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஒரு உதாரணமாக இந்தியா முழுவதும் பரவலாகப் பேசப... மேலும் பார்க்க

Sundar Pichai: "தென்னிந்திய ரயில் பயணம்; 'AI hub' மிகப்பெரிய முதலீடு" - சுந்தர் பிச்சை சொன்ன விஷயம்

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பங்களிக்கும் அடுத்த கட்ட பாய்ச்சலாக, கூகுளின் 'Google AI hub data centre'ஐ ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் பெரிய அளவில் கட்டமைக்க... மேலும் பார்க்க

`ஆபத்தான பட்டாசு ஆலை பணிகளில் ரோபோ' - கற்பனையாக ஒரு AI ஆல்பம்

`ஆபத்தான பட்டாசு ஆலை பணிகளில் ரோபோ' - AI ஆல்பம் `ஆபத்தான பட்டாசு ஆலை பணிகளில் ரோபோ' - AI ஆல்பம் `ஆபத்தான பட்டாசு ஆலை பணிகளில் ரோபோ' - AI ஆல்பம் `ஆபத்தான பட்டாசு ஆலை பணிகளில் ரோபோ' - AI ஆல்பம் `ஆபத்தான... மேலும் பார்க்க

சுந்தர் பிச்சையின் மாஸ்டர் பிளான்; இந்தியாவில் ₹1.25 லட்சம் கோடியில் 'Google AI Hub' - என்ன ஸ்பெஷல்?

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரி விதிப்பு, இந்திய ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள், H1B விசா சிக்கல்கள், அமெரிக்க டெக் நிறுவனங்களின் தலைமைப் பதவிகளில் அமெரிக்கர்களே இருக்க வேண்டும் என்ற பேச்சுகள் உலக நா... மேலும் பார்க்க

Google-க்கு செக் வைக்கும் ZOHO-வின் `Ulaa browser' - என்ன ஸ்பெஷல்?

இந்தியாவில் வாட்ஸப்பிற்கு மாற்றாக 'ZOHO' நிறுவனம் 'அரட்டை' ஆப்பை வெளியிட்டு செக் வைத்திருக்கிறது. இதையடுத்து கூகுள் குரோம் பிரவுசருக்கு செக் வைத்திருக்கிறது. உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் வெப் பிர... மேலும் பார்க்க

Instagram: "ரகசியமாக ஒட்டுக் கேட்கவில்லை; ஆனால்" - நீங்கள் பேசுவது விளம்பரமாக வர இதுதான் காரணம்

ஏதேனும் பொருள் அல்லது சேவை குறித்து நாம் பேசிக்கொண்டிருக்கையில் அடுத்த சில நிமிடங்களிலேயே நமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதுகுறித்த விளம்பரங்கள் தோன்றும், பலரும் இதனை அனுபவித்திருப்போம்.இது தற்செயலானதா... மேலும் பார்க்க