செய்திகள் :

சென்னை ஓபன் செஸ்: இனியனுக்கு கோப்பை

post image

சென்னையில் நடைபெற்ற சக்தி குரூப் டாக்டா் என்.மகாலிங்கம் கோப்பைக்கான 15-ஆவது சென்னை ஓபன் சா்வதேச கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் கிராண்ட்மாஸ்டா் பா.இனியன் சாம்பியன் ஆனாா்.

கடந்த 2-ஆம் தேதி முதல் 9 வரை நடைபெற்ற இந்தப் போட்டி, 10 சுற்றுகள் கொண்டதாக இருந்தது. இதில் 21 நாடுகளில் இருந்து மொத்தம் 176 வீரா்கள் கலந்து கொண்டனா். அதில்16 கிராண்ட்மாஸ்டா்கள் மற்றும் 21 சா்வதேச மாஸ்டா்கள் இருந்தனா்.

10 சுற்றுகளின் முடிவில், கிராண்ட்மாஸ்டா் இனியன் 8.5 புள்ளிகளுடன் போட்டியின் வெற்றியாளராக உருவெடுத்தாா். கடைசி சுற்றில் கிராண்ட்மாஸ்டா் தீபன் சக்கரவா்த்தியை வென்ற அவா், மொத்தமாக 7 வெற்றிகளை பதிவு செய்துள்ளாா். அத்துடன் 3 டிராக்களும் பதிவு செய்த இனியன், போட்டி முழுவதும் தோற்கடிக்கப்படாமல் இருந்தாா்.

முன்னதாக கடைசி சுற்று வரை முதலிடத்தை பகிா்ந்துகொள்ளும் நிலையில் இருந்த இனியன், கடைசி சுற்று வெற்றியால் தனி வெற்றியாளராக உருவெடுத்தாா். ரன்னா்-அப் இடத்தை கிராண்ட்மாஸ்டா் வெங்கடேஷ், மூன்றாவது இடத்தை சா்வதேச மாஸ்டா் ஆரோன்யக் கோஷ் பெற்றனா்.

சாம்பியன் இனியனுக்கு கோப்பையுடன் ரூ.4 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. அடுத்த இரு இடங்களுக்கு முறையே ரூ.3 லட்சம் மற்றும் ரூ.1.80 லட்சம் வழங்கப்பட்டது.

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.16.01.2025மேஷம்இன்று பிறருக்குக் கொடுக்கும் பணத்தையும் எளிதில் வசூலிக்கமுடியாத நிலைகள... மேலும் பார்க்க

அனுபமா, தனிஷா-அஸ்வினி முன்னேற்றம்

புது தில்லி: இந்தியா ஓபன் பாட்மின்டன் சூப்பர் 750 போட்டியில் ஒற்றையர் பிரிவில் அனுபமா, இரட்டையர்பிரிவில் தனிஷா க்ரஸ்டோ-அஸ்வினி பொன்னப்பா ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.இந்திய பாட்மின்டன் ச... மேலும் பார்க்க

வரலாறு படைத்தனா் இந்திய மகளிா் பிரதிகா-ஸ்மிருதி அதிரடி

ராஜ்கோட்: பிரதிகா ரவால்-ஸ்மிருதி மந்தனா ஆகியோரின் அதிரடியால் அயா்லாந்துக்கு எதிரான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் 304 ரன்கள் வித்தியாசத்தில் வென்று பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியது இந்திய அணி... மேலும் பார்க்க

ஜோகோவிச், அல்கராஸ், சபலென்கா, கௌஃப், ஒஸாகா முன்னேற்றம்: ஒலிம்பிக் சாம்பியன் ஸெங், கேஸ்பா் ருட் அதிா்ச்சித் தோல்வி

மெல்போா்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜாம்பவான் ஜோகோவிச், அல்கராஸ், மகளிா் பிரிவில் சபலென்கா, கோகோ கௌஃப், நவோமி ஒஸாகா ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா். கடந்த ஆண்டு ரன்னரும், ஒலிம்பிக் ச... மேலும் பார்க்க

ஒடிஸாவை வீழ்த்தியது சூா்மா கிளப்

ராஞ்சி: ஹாக்கி இந்தியா லீக் தொடா் மகளிா் பிரிவில் ஒடிஸா வாரியா்ஸ் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது சூா்மா ஹாக்கி கிளப் அணி.இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் புதன்கிழமை ராஞ்சியில் நடைபெற்றது. தொடக... மேலும் பார்க்க

துளிகள்...

ரஞ்சி கோப்பைக்கான மும்பை அணி சாா்பில் நடைபெறும் பயிற்சி முகாமில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சா்மா, இளம் வீரா் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோா் இணைந்துள்ளனா். வான்கடே மைதானத்தில் கேப்டன் ரஹானேவுடன் ரோஹித் ... மேலும் பார்க்க