சென்னை: திடீரென உள்வாங்கிய சாலை; கார் கவிழ்ந்து விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் சொல்வது என்ன?
சென்னை மத்திய கைலாஷிலிருந்து தரமணி செல்லும் பிரதான சாலையில் டைடல் பார்க் அமைந்துள்ளது.
நேற்று மாலை சுமார் 5 மணியளவில் இந்த டைடல் பார்க் முன்பாக செல்லும் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது.
அந்தப் பள்ளத்திற்குள் கார் ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்தக் காரில் ஓட்டுநர் உட்பட 5 பேர் பயணித்த நிலையில் நல்வாய்ப்பாக எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளத்திலிருந்து காரை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக வெளியான செய்தியில் டிராவல்ஸ் நிறுவனத்தில் வாடகை கார் ஓட்டும் மரியதாஸ் (47) சென்ட்ரல் ரயில் நிலையம் செய்வதற்காக விக்னேஷ், அவரின் மனைவி இரண்டு குழந்தைகளுடன் தனது காரில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போதுதான் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் ஓட்டுநர் மரியதாஸுக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. மற்ற நான்கு பேரும் காயமின்றி தப்பினர்.
பள்ளம் ஏற்பட்ட இடத்திலிருந்து சில அடி தூரத்தில், மெட்ரோ ரயில் வழித்தடத்திற்காகச் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடக்கிறது.
அப்பணியின் அழுத்தம் காரணமாக, பள்ளம் விழுந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. ஆனால் இதை, மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுத்துள்ளது. எனினும், பள்ளம் விழுந்த காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb