செய்திகள் :

சென்னை திரும்பிய அஜித் குமார்! ஏகே-64 படப்பிடிப்பு எப்போது?

post image

நடிகர் அஜித் குமார் கார் ரேஸ் பணிகளை முடித்து சென்னைக்குத் திரும்பினார்.

நடிகர் அஜித் குமார் நடிப்பையும் கார் ரேஸையும் இரு கண்களாக பார்த்து வருகிறார். 6 மாதம் சினிமா படப்பிடிப்பிலும் 6 மாதம் கார் ரேஸிலும் இருப்பேன் என சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார்.

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அஜித் ரசிகர்களுக்கு பிடித்திருந்தது.

குட் பேட் அக்லி திரைப்படம் ரூ.282 கோடி வசூலித்ததாக தகவல்கள் தெரிவித்தன.

நடிகர் அஜித் அடுத்ததாக யாருடன் இணைந்து நடிப்பார் என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், ஏகே - 64 படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவார் எனவும் ஸ்ரீநிதி ஷெட்டி தகவல் வெளியாகியுள்ளது.

குட் பேட் அக்லி படத்தைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் அஜித் சென்னைக்குத் திரும்பியதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இயக்குநராக விரைவில் அறிமுகமாகும் நடிகர் பார்த்திபன் மகன்!

தனது மகன் ராக்கி பார்த்திபன், விரைவில் த்ரில்லர் படம் ஒன்றை இயக்கவுள்ளதாக நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,ராக்கி பார்த்திபன் !என் மகன் என் உயி... மேலும் பார்க்க

ஓடிடியில் ஏஸ்!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ஏஸ் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் ஆறுமுகக்குமார் கூட்டணியில் உருவான திரைப்படம் ஏஸ். முழுக்கதையும் மலேசியாவில் நடப்பதுபோல் எ... மேலும் பார்க்க

கண்ணப்பா டிரைலர்!

நடிகர்கள் பிரபாஸ், மோகன்லால் நடிப்பில் உருவான கண்ணப்பா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.முகேஷ் குமார் சிங் இயக்க, மோகன் பாபு தயாரித்துள்ள கண்ணப்பா படத்தில் பிரபாஸ், விஷ்ணு மஞ்சு, மோகன்லால், பிரபு தேவா... மேலும் பார்க்க

ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த முத்த மழை விடியோ வெளியீடு!

தக் லைஃப் படத்தில் இடம்பெறாத முத்த மழை பாடலின் விடியோவை வெளியிட்டுள்ளனர். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன் நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம் ஜுன். 5 ஆம் தேதி வெளியா... மேலும் பார்க்க

இசையமைப்பாளர் அனிருத் திருமணம்? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரனுக்கும் தொழிலதிபர் காவியா மாறனுக்கும் திருமணம் நடைபெறவிருப்பதாகப் பரவிய வதந்தியை அனிருத் மறுத்துள்ளார்.தொழிலதிபர் கலாநிதி மாறனின் மகள் காவியா மாறனை இசையமைப்பாளர் அனிர... மேலும் பார்க்க

நம் நாட்டின் மிகப்பெரிய பட்ஜெட் படம் இதுதான்: அட்லி

அல்லு அர்ஜுன் படத்தின் பட்ஜெட் குறித்து அட்லி பேசியுள்ளார்.புஷ்பா - 2 படத்தின் இமாலய வெற்றிக்குப் பின் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப... மேலும் பார்க்க