செய்திகள் :

சென்னையில் கனமழை: பேருந்துப் போக்குவரத்தில் மாற்றம்

post image

சென்னை: தமிழகத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், பேருந்துப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகரப் பேருந்துப் போக்குவரத்து அறிவித்துள்ளது.

அதிகளவில் மழை பெய்து, சாலைகளில் வெள்ளம் தேங்கியிருந்தால், அப்பகுதியில் பேருந்துகளை இயக்காமல், பாதியிலேயே பேருந்துகள் நிறுத்தும் வகையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

அதாவது, முதற்கட்டமாக, தாழ்தள பேருந்துகளுக்குள் மழைத் தண்ணீர் நுழைந்துவிடுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தண்ணீர் சூழ்ந்திருக்கும் பகுதிகளில் இயக்கப்படும் தாழ்தள பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க.. புயல் சின்னம் எங்கே கரையை கடக்கும்? அடுத்த 3 நாள்களுக்கான தகவல்!

அடுத்தது, அம்பத்தூர், ஆவடியிலிருந்து கிண்டி செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்துடன் நிறுத்தவும், தாம்பரத்திலிருந்து செங்குன்றம் செல்லும் பேருந்துகள் அம்பத்தூர் அல்லது அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பெரம்பூர் சுரங்கப்பாதை, முரசொலி மாறன், மேட்லி சுரங்கப் பாதை உள்ளிட்டப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

சுதந்திர தின பூங்கா முதல் நாகாஸ் வரை வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதாலும், பெரியார் சாலை - நெற்குன்றம் பகுதிகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஓஎம்ஆர், பெருங்குடி, கந்தன்சாவடி பகுதிகளிலும் மழை நீர் தேங்கியிருப்பதால் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் செல்லும் பயணிகள் 104சி, 104சிஎக்ஸ் தடத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஏஐ தொழில்நுட்பத்தால் தீா்ப்பு வழங்க முடியாது: உயா்நீதிமன்ற நீதிபதி பி.பி.பாலாஜி

நீதிமன்றங்களில் தீா்ப்பு வழங்கும் நீதிபதிகளுக்கு அனுதாபம், இரக்க குணம் இருக்க வேண்டும். அந்தவகையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தால் சரியான தீா்ப்பை வழங்க முடியாது என்று சென்னை உயா்நீதிமன்ற நீ... மேலும் பார்க்க

திருச்சி செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம்

திருச்சி ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட ரயில்வே பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

ஓடிடி படங்களுக்கும் விரைவில் தணிக்கை சட்டம்: மத்திய இணை அமைச்சா் எல். முருகன்

ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்களையும் தணிக்கை செய்யும் சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். மத்திய செய்தி ஒலிபரப்பு ... மேலும் பார்க்க

மாநிலம் முழுவதும் நவ. 23-இல் கிராம சபைக் கூட்டம்: தமிழக அரசு உத்தரவு

மாநிலம் முழுவதும் கிராம சபைக் கூட்டங்கள் வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளன. இதற்கான கடிதத்தை அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநா் பா.பொன்னையா அனுப்பியுள்ளாா். கட... மேலும் பார்க்க

தமிழக காவல் துறையில் ஒரே நாளில் 2,153 காவலா்கள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் ஒரே நாளில் 2,153 காவலா்கள் சனிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இது குறித்த விவரம்: தமிழக காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீன... மேலும் பார்க்க

திருவனந்தபுரத்துக்கு இன்று சிறப்பு ரயில்

சென்னை சென்ட்ரலிலிருந்து திருவனந்தபுரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்ட்ரலிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (நவ.10) இரவு 11.... மேலும் பார்க்க