Rain Alert: கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விட...
சென்னை: தீபாவளி பட்டாசுகளால் புகை மூட்டம்; 400-ஐ தாண்டிய காற்று மாசுபாடு குறியீடு
தீபாவளி முடிந்துவிட்டது. நேற்று வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் நம்மைச் சுற்றிலும் ஏற்பட்ட புகை மூட்டத்தை நாமே நம் கண்களில் பார்த்திருப்போம்.
சென்னையில் காற்று மாசுபாடு குறியீடு 400-ஐயும், கோவையில் காற்று மாசுபாடு குறியீடு 300-ஐயும் தாண்டியுள்ளது.
நேற்று சென்னையில்...
நேற்று காலை 8.04 மணிக்கு, சென்னையில் குறைந்தபட்சமாக காற்று மாசுபாடு குறியீடாக 56 இருந்தது.
இரவு 7.04 மணிக்கு, அதிகபட்சமாக காற்று மாசுபாடு குறியீடு 448 எனப் பதிவாகியுள்ளது.


நேற்று கோவையில்...
நேற்று காலை 11.04 மணிக்கு, கோவையில் குறைந்தபட்சமாக காற்று மாசுபாடு குறியீடு 68 ஆக இருந்துள்ளது.
இரவு 11.05 மணிக்கு, அதிகபட்சமாக காற்று மாசுபாடு குறியீடாக 325 ஆக இருந்துள்ளது.
இந்தத் தரவுகள் Air Quality Index வலைதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
இந்தக் குறியீடு 300-ஐ தாண்டும்போது, மிகுந்த ஆபத்தாக மாறுகிறது.
நேற்றைய காற்று மாசுபாடு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் சுந்தர்ராஜன் பதிவிட்டிருப்பதாவது...
பட்டாசை தவிர்ப்போம் என்றால், உடனே பட்டாசு மட்டும்தான் மாசா என்று ஒரு சிலர் கேட்பார்கள்..
— G. Sundarrajan (@SundarrajanG) October 20, 2025
பட்டாசு மட்டுமே மாசல்ல, ஆனால் இவ்வளவு மோசமான காற்றை சென்னைவாசிகள் தீபாவளியை தவிர வேறு என்றாவது சுவாசித்து இருப்பார்களா??
Source :- https://t.co/zY4rnhUCnG#AirPollution… pic.twitter.com/h4vGMSkGvh