செய்திகள் :

சென்னை: பிரபல மாலில் லிஃப்ட் விபத்து; உடல் நசுங்கி ஊழியர் பலி - அதிர்ச்சி சம்பவம்

post image

சென்னையில் உள்ள பிரபல வணிக வளாகமான எக்ஸ்பிரஸ் அவென்யூவின் லிஃப்டில் சிக்கி ஊழியர் ஒருவர் இன்று உயிரிழந்திருக்கிறார். ஊழியரின் பாதுகாப்பை உறுதி செய்வதில் நிர்வாகம் அலட்சியம் காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகமான எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் இன்று காலை இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கட்டடத்தில் உள்ள லிஃப்ட்டை பயன்படுத்திய ஊழியர் ஒருவர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அதில் சிக்கிக் கொண்டிருக்கிறார். அவரால் லிஃப்ட்டிலிருந்து வெளியே வரமுடியாத நிலையில் ஏற்பட்டிருக்கிறது.

பலி
ஊழியர் பலி

இதனை அடுத்து சக ஊழியர்கள் அவரை மீட்க முயற்சித்துள்ளனர். தகவல் அறிந்து மீட்பு குழுவினர் அங்கு வருவதற்குள் அந்த ஊழியர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இந்த விபத்து குறித்து சக ஊழியர்கள், லிஃப்ட் முறையாக பராமரிப்பதில் நிர்வாகம் அலட்சியம் காட்டியதாகவும் அதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாகவும் கூறியிருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை: ஒரே நாளில் 14 பேரை கடித்த வளர்ப்பு நாய்; உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியில் சமீப காலமாக நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணிகள் குறைந்துள்ளது. இதனால், நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலைகள், தெருக்களில் நாய்கள் க... மேலும் பார்க்க

ரயில் மோதி இறந்த பெண்; வேடிக்கை பார்க்கச் சென்ற நபரும் உயிரிழந்த பரிதாபம் - குளித்தலை சோகம்

திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியைச் சேர்ந்தவர் அன்னக்கிளி (வயது 52). இவர், கரூர் மாவட்டம், சிந்தலவாடியில் உள்ள தன் தாயார் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், லாலாபேட்டை ரயில் நிலையம் அருகே ரயில்வே... மேலும் பார்க்க

பாம்பன் பாலத்தில் சென்ற ரயில்; கடலில் தவறி விழுந்த வாலிபர்... காயம் இன்றி உயிர் தப்பிய அதிசயம்!

மதுரை பரவை பகுதியை சேர்ந்த இளைஞர் வரதராஜன். வங்கி ஊழியரான இவர், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்ய நேற்று காலை மதுரையில் இருந்து ராமேசுவரம் வந்துள்ளார். மதுரை பாசஞ்சர் ரயிலில் ராமேசுவரம் வ... மேலும் பார்க்க

4-வது மாடியிலிருந்து விழுந்து பிழைத்த குழந்தை; டிராபிக்கில் 4 மணி நேரம் சிக்கியதால் உயிரிழப்பு

புல் தடுக்கி விழுந்து உயிரிழந்தவர்களும் உண்டு. அதே சமயம் மிகப்பெரிய விபத்தில் சிக்கியவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவமும் நடந்துள்ளது.மும்பையில் நான்காவது மாடியில் இருந்து விழுந்த குழந்தை அதி... மேலும் பார்க்க

கேரளா: இடுக்கி ரிசார்ட் கட்டுமானத்தில் விபத்து; மண் சரிந்து 2 தொழிலாளர்கள் பலி | Photo Album

தொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிகேரளாவிலும் தமிழ்நாட்டிலும் வாக்குரிமை..... மேலும் பார்க்க

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த பெண் பலி; போலீஸ் தீவிர விசாரணை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள கங்கர்செவல் சத்திரப்பட்டி கிராமத்தில் திவ்யா பைரோடெக் எனும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.இந்த வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் ஒருவர் உயிரிழ... மேலும் பார்க்க