சென்னை புத்தகக் காட்சி நீட்டிப்பா? பபாசி விளக்கம்!
சென்னை புத்தகக் காட்சி தேதி நீட்டிக்கப்படுவதாக வெளியான தகவல்களுக்கு பபாசி செயலர் விளக்கமளித்துள்ளார்.
சென்னை நந்தனத்தில் பபாசி-இன் 48-ஆவது சென்னை புத்தகக் காட்சி டிச.27-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜனவரி 12 ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள புத்தகக் காட்சி தேதி நீட்டிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன.
ஆனால், சமூக ஊடகங்களில் வரும் தகவல்கள் உண்மையல்ல என்று பபாசி செயலர் முருகன் விளக்கமளித்துள்ளார்.
சென்னை புத்தகக் காட்சி திட்டமிட்டபடி, ஜனவரி 12 ஆம் தேதியுடன் நிறைவடைவதுடன், இன்னும் 3 நாள்களே இருப்பதால் வாசகர்கள் திரளாக வருமாறும் பபாசி செயலர் முருகன் அழைப்பு விடுத்துள்ளார்.