கொடைக்கானல்: வேரோடு கஞ்சா செடி விற்பனை; போதையில் மாட்டிய கல்லூரி மாணவர்; நடந்தது...
சென்னை விமான நிலையத்தில் உயர் பாதுகாப்பு எச்சரிக்கை! பயணிகளுக்கு அறிவுரை...
சென்னை சர்வதேச விமான நிலையம் உயர் பாதுகாப்பு எச்சரிக்கையின் கீழ் இயங்கும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனால், சுமூகமான பயணத்தை மேற்கொள்ள முன்கூட்டியே விமான நிலையத்துக்கு வருகைதருமாறு பயணிகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி 76 ஆவது குடியரசு நாள் விழா கொண்டாடப்படவுள்ளன.
இதனையொட்டி, பயங்கரவாத சதிச் செயல்களை தடுக்கும் வகையில் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், முக்கிய வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஜனவரி 30 ஆம் தேதி வரை சென்னை விமான நிலையம் உயர் பாதுகாப்பு எச்சரிக்கையின் கீழ் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு மத்திய பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.