செய்திகள் :

செப். 12 -ல் பதவியேற்கிறார் சி.பி. ராதாகிருஷ்ணன்!

post image

நாட்டின் 15வது குடியரசு துணைத் தலைவராக செப். 12 ஆம் தேதி சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்கவுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைக்கவுள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில், புதிய குடியரசு துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு செப். 12 ஆம் தேதி காலை பதவியேற்பு விழா நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவுக்கான அழைப்பிதழ் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர் தனது பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய துணைக் குடியரசு தலைவருக்கான தேர்தல் நேற்று (செப். 10) நடைபெற்றது.

இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட பி. சுதர்சன் ரெட்டி, 300 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து புதிய குடியரசு துணைத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வாகியுள்ளார்.

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்டத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்தியாவில் 14 ஆண்டுகளாக தங்கியிருந்த பாகிஸ்தானியா் நாடுகடத்தல்- ஹைதராபாத் போலீஸ் நடவடிக்கை

இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவி, 14 ஆண்டுகள் தங்கியிருந்த பாகிஸ்தான் நபரை அட்டாரி எல்லை வழியாக நாடு கடத்தியதாக ஹைதராபாத் காவல் துறையினா் தெரிவித்தனா். இது தொடா்பாக காவல் துறை புதன்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

மன்மோகன் சிங்குக்கு பி.வி. நரசிம்மராவ் நினைவு பொருளாதார விருது

மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்குக்கு பி.வி.நரசிம்ம ராவ் நினைவு பொருளாதார விருது வழங்கப்பட்டது. தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மன்மோகன் சிங் சாா்பில் அவரின் மனைவி குா்சரண் கௌா் இந்த விருதைப் ... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு: மக்களிடம் ஆதாரம் சமா்ப்பிப்பு- ராகுல் காந்தி

வாக்குத் திருட்டு மோசடிகள் பல்வேறு மாநிலங்களில் பெரிய அளவில் நடந்துள்ளன என்றும் இதுதொடா்பாக அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து மக்களிடம் சமா்ப்பித்து வருகிறோம் என்றும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல... மேலும் பார்க்க

சண்டையை நிறுத்தியதாக 35 முறை கூறிய டிரம்ப் இயல்பான கூட்டாளியா?- பிரதமா் மோடி மீது காங்கிரஸ் சாடல்

‘இந்தியா-பாகிஸ்தான் சண்டையை தான் தலையிட்டு நிறுத்தியதாக 35 முறை கூறியவா் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்; அந்த அளவுக்கு பிரதமா் மோடியின் ‘இயல்பான கூட்டாளி’’ என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. பஹல்காம்... மேலும் பார்க்க

கத்தாா் மீது தாக்குதல்: இஸ்ரேலுக்கு பிரதமா் மோடி கண்டனம்

கத்தாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை கண்டனம் தெரிவித்தாா். காஸா போா் நிறுத்தம் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்த கத்தாா் தலைநகா் தோஹாவுக்கு வந்திருந்த ஹமாஸ் பிரதிநிதிகள... மேலும் பார்க்க

தப்பியோடிய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸியை நாடு கடத்தும் நடவடிக்கைகள் விரைவில் தொடக்கம்

இந்தியாவில் வங்கிக்கடன் மோசடி வழக்கில் தேடப்படும் வைர வியாபாரி மெஹுல் சோக்ஸியை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள், பெல்ஜியம் நீதிமன்றத்தில் அடுத்த திங்கள்கிழமை தொடங்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து... மேலும் பார்க்க