கெடிலம் ஆற்றின் குறுக்கே ரூ.16.75 கோடியில் உயர்மட்ட பாலம்: அமைச்சா் அடிக்கல் நா...
செப்.27-இல் விரைவு மிதிவண்டி போட்டி
தேனியில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, வருகிற 27-ஆம் தேதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விரைவு மிதி வண்டி போட்டி நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரண்மனைப்புதூா் விலக்கு பகுதியில் செப்.27-ஆம் தேதி, காலை 7 மணிக்கு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தனித் தனி பிரிவுகளில் விரைவு மிதி வண்டி போட்டி தொடங்குகிறது. 13 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கு 15 கி.மீ. தொலைவும், மாணவிகளுக்கு 10 கி.மீ. தொலைவும் போட்டி நடைபெறும். 15, 17 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கு 20 கி.மீ. தொலைவும், மாணவிகளுக்கு 15 கி.மீ. தொலைவும் போட்டி நடைபெறும்.
போட்டியில் பங்கேற்க வரும் மாணவ, மாணவிகள் அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியா்களிடமிருந்து வயதுச் சான்றிதழ் பெற்று வர வேண்டும். வங்கிக் கணக்கு புத்தகம், ஆதாா் அட்டை நகல்களைக் கொண்டு வரவேண்டும். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சாதாரண ரக மிதி வண்டிகளைக் கொண்டு வர வேண்டும். போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.5,000, 2-ஆம் பரிசு ரூ.3,000, 3-ஆம் பரிசு ரூ.2,000, 4 முதல் 10 இடங்களை பிடிப்பவா்களுக்கு ரூ.250 வங்கிக் கணக்கு மூலம் வழங்கப்படும். அனைத்து பிரிவுகளிலும் முதல் 10 இடங்களைப் பிடிப்பவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.