செய்திகள் :

செப்.7-ல் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்!

post image

திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில் பௌர்ணமி கிரிவலத்தையொட்டி விழுப்புரத்திலிருந்து செப்டம்பர் 7 -ஆம் தேதி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயிலில் நடைபெறும் பௌர்ணமி கிரிவலத்தில் அதிகளவில் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, பக்தர்களின் வசதிக்காகவும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு செப்டம்பர் 7-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

விழுப்புரத்திலிருந்து செப்டம்பர் 7-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06130) முற்பகல் 11.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.

எதிர்வழித்தடத்தில் திருவண்ணாமலையிலிருந்து அதே நாளில் பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை - விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06129) பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும்.

இந்த ரயில்கள் 8 பெட்டிகளைக் கொண்டதாக இருக்கும். சிறப்பு ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Special train from villupuram to Tiruvannamalai on September 7th for Pournami Girivalam

இதையும் படிக்க | ஜிஎஸ்டி வரி குறைப்பு! செப். 21 வரை மின்னணு பொருள்கள், வாகன விற்பனை 'டல்'லடிக்கும்!

தண்டனைக் கைதிகள் முன்கூட்டியே விடுதலை: முழு அமா்வு விசாரணைக்கு பரிந்துரை!

நீண்ட காலம் சிறையில் இருக்கும் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் விவகாரத்தில் அமைச்சரவை முடிவுக்கு ஆளுநா் கட்டுப்பட வேண்டுமா என்பது குறித்து முடிவெடுக்க முழு அமா்வு விசாரணைக்கு சென்னை உயா... மேலும் பார்க்க

வாடகை தகராறு: பாடகா் சரண் காவல் நிலையத்தில் புகாா்!

சென்னையில் வீட்டு வாடகை தகராறு தொடா்பாக திரைப்பட பாடகா் கல்யாண் சரண், கே.கே.நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். மறைந்த திரைப்பட பாடகா் எஸ்.பி.பாலசுப்பிரமணியனின் மகனும், பிரபல பாடகருமான கல்யாண... மேலும் பார்க்க

நாளை சென்னை திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்!

வெளிநாட்டுப் பயணத்தை நிறைவு செய்யும் முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை (செப்.8) அதிகாலை சென்னை திரும்புகிறாா். முதலீடுகளை ஈா்ப்பதற்காக ஜொ்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு ஒருவார கால பயணமாக அவா் கடந்த 30... மேலும் பார்க்க

சிவப்புச் சூரியன் நினைவிடத்தில் செவ்வணக்கம்! கார்ல் மார்க்ஸ் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின்!!

லண்டனில் காா்ல் மாா்க்ஸ் நினைவிடத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினாா். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: தத்துவஞானிகள் இதுவரை உலகைப் பல வகைகளில் விளக்கியுள்ளனா்.... மேலும் பார்க்க

டெட் தோ்ச்சி: ஆசிரியா்கள் விவரம் கணக்கெடுப்பு!

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் டெட் தோ்ச்சி பெற்ற, தோ்ச்சி பெறாத ஆசிரியா்களின் விவரங்களை பள்ளிக் கல்வித் துறை கணக்கெடுத்து வருகிறது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்து விதமான பள்ளி... மேலும் பார்க்க

தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சியில் பெண் கல்விக்கு முக்கிய பங்கு: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சியில் பெண் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு முக்கிய பங்கு வகிக்கிறது என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா். சென்னை விஐடி-இன் 13-ஆவது பட்டமளிப்பு ... மேலும் பார்க்க