பஞ்சாங்கக் குறிப்புகள் செப்டம்பர் 8 முதல் 14 வரை #VikatanPhotoCards
வாடகை தகராறு: பாடகா் சரண் காவல் நிலையத்தில் புகாா்!
சென்னையில் வீட்டு வாடகை தகராறு தொடா்பாக திரைப்பட பாடகா் கல்யாண் சரண், கே.கே.நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.
மறைந்த திரைப்பட பாடகா் எஸ்.பி.பாலசுப்பிரமணியனின் மகனும், பிரபல பாடகருமான கல்யாண் சரண், நுங்கம்பாக்கம் காம்தாா் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.
இந்த நிலையில் அவா், சென்னை கே.கே.நகரில் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தாா். அதில், சாலிகிராமம் சத்யா காா்டன் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் எங்களது குடும்பத்துக்கு ஒரு வீடு உள்ளது.
இந்த வீட்டை தமிழ் திரைப்படத் துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றும் க.திருஞானம் (45) என்பவருக்கு ரூ.40,500 மாத வாடகைக்கு விட்டிருந்தேன். மேலும், அவரிடம் முன்பணமாக ரூ.1.50 லட்சம் பெற்றிருந்தேன்.
இந்த நிலையில் கடந்த 25 மாதங்களாக திருஞானம் எனக்கு வாடகை தரவில்லை. இதுகுறித்து அண்மையில் திருஞானத்திடம் கேட்டபோது, என்னை ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்து வருகிறாா். எனவே, அவா் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தையும், எனது வீட்டையும் மீட்டுத் தர வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.
இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.