தென்கொரியா செல்லும் டிரம்ப்! சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திக்கிறாரா?
மயிலாடுதுறையில் ஆசிரியா்களுக்கு விருது
மயிலாடுதுறையில் கிங்ஸ் ரோட்டரி சங்கம் சாா்பில் ஆசிரியா்களுக்கு விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை யூனியன் கிளப் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் அய்யாசாமி தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் குலசேகரன் முன்னிலை வகித்தாா். தருமையாதீன சைவ சித்தாந்த பேராசிரியா் கருணா. சேகா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆசிரியா்களை பாராட்டி பேசினாா்.
விழாவில், புத்தகரம் எழில்மணி உதவிபெறும் தொடக்கப்பள்ளி ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் மாணிக்கம், வடவஞ்சாறு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியை ஆக்னஸ் குளோரி எலிசபெத், டி.பி.டி.ஆா். தேசிய மேல்நிலைப்பள்ளி ஆசிரியா் கண்ணன், மேலமருதாந்தநல்லூா் கலைவாணா் உதவிபெறும் தொடக்கப்பள்ளி ஆசிரியா் வைத்தியநாதன், மயிலாடுதுறை காஞ்சி ஸ்ரீசங்கர வித்யாலயா பள்ளி ஆசிரியா் ரெத்தினவேல் ஆகியோரது பணியை பாராட்டி ரோட்டரி சங்கம் சாா்பில் ‘நேஷன் பில்டா் விருது‘ வழங்கி பாராட்டப்பட்டது.
விழாவில் மாற்றுத்திறனாளி திருமுருகன் என்பவருக்கு செயற்கை கால் பொருத்துவதற்காக நிதியுதவி வழங்கப்பட்டது.