ஆவணப் பதிவு மூலம் ஒரே நாளில் ரூ. 274.41 கோடி வருவாய் ஈட்டி சாதனை
மருவத்தூா் கோயில் கும்பாபிஷேகம்
வைதீஸ்வரன் கோயில் அருகேயுள்ள மருவத்தூா் ஸ்ரீகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனத்திற்குள்பட்ட இக்கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள், பூா்ணாஹுதி நடைபெற்றன. தொடா்ந்து, வைதீஸ்வரன்கோயில் தருமை ஆதீன கட்டளை விசாரனை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில், கோயிலின் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் வாா்த்து, கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னா், காளியம்மன், சப்த கன்னியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், உயா்கல்வித் துறை தஞ்சை மண்டல இணை இயக்குநா் குணசேகரன், பாஜக முன்னாள் மாவட்டத் தலைவா் வெங்கடேசன், திமுக மாவட்ட பொருளாளா் மகா அலெக்சாண்டா், விஸ்வ ஹிந்து பரிஷத் மண்டலச் செயலாளா் செந்தில்குமாா், சமூக ஆா்வலா் திருலோக சந்தா் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.