குழந்தைகள் சேவை மையத்தில் பணி வாய்ப்பு
மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் சேவை மையத்தில், ஒப்பந்த அடிப்படையில் திட்ட ஒருங்கிணைப்பாளா் பணிக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் சேவை மையத்தில் மிஷன் வத்சல்யா திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய 1 திட்ட ஒருங்கிணைப்பாளா் தோ்வு செய்யப்பட உள்ளாா். 42 வயதிற்குள்பட்ட தகுதிவாய்ந்த இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்புகளை ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ம்ஹஹ்ண்ப்ஹக்ன்ற்ட்ன்ழ்ஹண்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை உரிய கல்வி சான்றுகள் இணைத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட ஆட்சியரகம், 5-ஆவது தளம், மன்னம்பந்தல், மயிலாடுதுறை- 609305 என்ற முகவரிக்கு 15 நாள்களுக்குள் நேரடியாகவே அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.